- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் அடுத்து கைகோர்க்கப் போவது எந்த இயக்குனருடன்...

விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் அடுத்து கைகோர்க்கப் போவது எந்த இயக்குனருடன் தெரியுமா? – அட இது வெற்றிக் கூட்டணியாச்சே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. கடந்த ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று வெளியானது. இப்போது 20 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அடுத்த படம் ரிலீஸ் ஆகாமல் அஜீத் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.

இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்த நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகுமா, என்பதில் குழப்பமும், சந்தேகமும் நீடிக்கிறது. ஏனெனில் இன்னும் பேட்ச் ஒர்க் பணிகள் மீதம் இருக்கின்றன. அதே போல் திரிஷா, அஜீத் நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்றும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்காக மீண்டும் ஒருமுறை அஜர்பைஜான் செல்ல வேண்டும் என்று படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி கூறிக்கொண்டு இருக்கிறார். மேலும் படத்தின் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பினிஷிங் செய்து தருமாறு தன்னை நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்திடம் அவர் பேசியும் இருக்கிறார்.

அதனால் விடாமுயற்சி தீபாவளிக்கோ, கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் வரவில்லை. அதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதனால் அப்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட்பேட் அக்லி படத்தை ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு நாளில் ரிலீஸ் செய்யவும் ஒரு திட்டமிடல் உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை தொடர்ந்து அஜீத்குமார் அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், இந்த 2 படங்களை முடித்துவிட்டு ஒரு ஆண்டுக்கு முழுநேர ஓய்வில் இருக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. இதில் எது உண்மை என்பதற்கு அஜீத்குமார்தான் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்களை முடித்த பிறகு, நடிகர் அஜீத்குமார் மீண்டும் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்ற 4 படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வெற்றிப் படங்களாக அமைந்தவை. அதனால் 5வது முறையாக மீண்டும் அஜீத் – சிறுத்தை சிவா கூட்டணி கைகோர்ப்பது உறுதி என்ற தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்