நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜீத்குமார் ஆகிய நான்கு பேரும்தான் இன்றைய தமிழ் சினிமாவில் 4 தூண்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் நடித்த படங்கள் மட்டுமே, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்காது. இவர்கள் படம் விமர்சன ரீதியாக தோற்றாலும், வசூல் ஏமாற்றத்தை தராது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்த வரை, சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் சினிமா மீது அவர் காட்டிய அபரிமிதமான ஆர்வமும், அக்கறையும் கடந்த பல ஆண்டுகளாகவே அவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ஆறு மாதங்கள் வெளிநாட்டில்தான் இருக்கிறார். சென்னையில் இருப்பதே இல்லை என்றும் கூறப்படுகிறது.
பைக் ரேஸ், பைக் டூர், ரைபிள் சூட்டிங், பிளைட் ரைடிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு கேம்ஸ் தான் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. விளையாட்டில் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளதால், சினிமாவில் போதிய கவனம் செலுத்துவதில்லை. தேவைக்கு அதிகமான பணம், புகழ் இருப்பதால் மீண்டும் மீண்டும் சினிமாவில் கவனம் கொள்ள அவர் விரும்புவதில்லை.
அப்பா அஜீத்குமார் போல, அவரது மகனும் இப்போது இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அஜீத்குமார் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற 16 வயது மகளும், ஆத்விக் என்ற 9 வயது மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். சமீபத்தில் ஆத்விக் பிறந்தநாளை, அஜீத்குமார் குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போதுதான் ஆத்விக் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. அதாவது அஜீத்குமார் ஆத்விக், கால்பந்தாட்ட பிரியராக இருக்கிறார். எப்சி என்ற கால்பந்தாட்ட கிளப்பில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். 9 வயதிலேயே கால்பந்து வீரர் ஆக வலம் வரும் ஆத்விக் பிறந்த நாளின் போது, சாம்பியன் கால்பந்து வீரர்களான ரொனால்டினா, டேவிட் டெக்காம் போன்றவர்களின் பேனர் வைத்து, கால்பந்து வடிவிலான கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.
மேலும் அந்த கொண்டாட்டத்தின் போது புட்பால் வீரர்கள் அணியும் புட்பால் ஜெர்சியை தான், அஜீத் மகன் ஆத்விக் அணிந்திருந்தார். இந்த பிறந்த நாள் விழா புகைப்படங்களை, ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அப்பாவுக்கு தப்பாத புள்ளையாக அஜீத் மகனும் விளையாட்டு பிரியராக இருக்கிறாரே, என சினிமா ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.





