- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில்தான் காமெடி நடிகர், நிஜத்தில் ஹீரோவாக மகனை ஜெயிக்க வைத்த நடிகர் சின்னி ஜெயந்த் -...

சினிமாவில்தான் காமெடி நடிகர், நிஜத்தில் ஹீரோவாக மகனை ஜெயிக்க வைத்த நடிகர் சின்னி ஜெயந்த் – அவர் வீட்ல இப்போ என்ன விசேஷம் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகளின் மகன்கள், மகள்கள் அவர்களது கலை வாரிசுகளாக நடிக்கவோ, இயக்கவோ செய்கின்றனர். அந்த வகையில் ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சரத்குமார் மகள் வரலட்சுமி என பலரும் கலைத்துறை வாரிசுகளாக இருக்கின்றனர்.

முரளி மகன் அதர்வா, கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக், சிவக்குமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ் மகன் சிபிராஜ், பிரபு மகன் விக்ரம் பிரபு, எம் ஆர் ராதா மகன் ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா மகன் உமாபதி என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். சிவாஜி மகன் பிரபு, முத்துராமன் மகன் கார்த்திக், நாகேஷ் மகன் ஆனந்தபாபு என பெரிய நடிகர்களின் மகன்கள், சினிமாவில்தான் நடிக்க வந்தனர்.

ஆனால் தன் மகனை தன்னைப் போல் ஒரு நடிகனாக மாற விடாமல், சப் கலெக்டராக்கி அழகு பார்த்தவர்தான் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த், கடந்த 1984ம் ஆண்டில் வெளிவந்த ரஜினிகாந்த், ரேவதி நடித்த கை கொடுக்கும் கை படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சின்னி ஜெயந்த். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் சின்னி ஜெயந்த் நடித்திருந்தார். அதே போல் யோகி பாபு நடித்துள்ள போட் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இப்போது நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிப்பில் பல படங்களில் அசத்தியவர் சின்னிஜெயந்த்.

சின்னிஜெயந்தின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த். யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தில் தேர்ச்சியடைந்து வெற்றி பெற்ற அவர், முதலில் திருப்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பதவியேற்று, சிறப்பாக பணிபுரிந்தார். இப்போது விருதுநகர் சப் கலெக்டராக பணிபுரிந்து அவர் பணிசெய்து வருகிறார்.

இந்நிலையில், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் ஜெயந்துக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் சின்னி ஜெயந்த் வீட்டில் கெட்டிமேளம் ஒலிக்க இருக்கிறது. இதற்காக திருமண அழைப்பிதழ்களை தன் திரையுலக நண்பர்கள், குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர் சின்னி ஜெயந்த் மற்றும் அவரது குடும்பத்தினர். திரையில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் சின்னி ஜெயந்த், இன்று சப் கலெக்டர் தந்தையாக திருமண ஏற்பாடுகளை கம்பீரமாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்