- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரை மணி நேரத்துக்கு 2 லட்சம், ஒரு மணி நேரத்துக்கு 5 லட்சம் - நடிகர்...

அரை மணி நேரத்துக்கு 2 லட்சம், ஒரு மணி நேரத்துக்கு 5 லட்சம் – நடிகர் அனுராக் காஷ்யப் செய்த வில்லங்கமான அறிவிப்பால் கிறுகிறுத்துப் போன ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகர்கள் ரசிகர்களின் மனதில் நல்ல அபிமானத்தை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் அவர்களது நடிப்பும் தோற்றமும் நடிப்பை வெளிப்படுத்தும் விதமும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடுகிறது. அதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழி நடிகர்களில் அவ்வப்போது தமிழில் கலக்கி வருகின்றனர்.

இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியவர் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப். இவர் நடிகர் மட்டுமல்ல, பாலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் டைரக்டராக இருக்கிறார். பல படங்களை தயாரித்திருக்கிறார். பல படங்களை டைரக்டர் செய்திருக்கிறார். நல்ல நடிகராகவும் அசத்தி வருகிறார்.

- Advertisement -

இமைக்கா நொடிகள் படத்தில், முக்கிய லீடிங் ரோலில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா தம்பியாக அதர்வா நடித்திருந்தார். இதில் வில்லன் கேரக்டரில் மிக அசத்தலான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர்தான் அனுராக் காஷ்யப். லியோ படத்தில், ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். அறிமுக காட்சியிலேயே சுட்டுக் கொல்லப்படுவார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில், புதுமுகங்களுக்கு நான் உதவி செய்ய நினைத்து நான் நிறைய நேரத்தை வீணடித்து இருக்கிறேன். அதுவும் சராசரியான ஒன்றாக தான் கடைசியில் இருக்கிறது. கிரியேடிவ் ஜீனியஸ் என்று அவர்கள் தங்களை நினைத்துக்கொண்டு இருப்பவர்களிடம் என்னுடைய நேரத்தை இனி நான் வீணடிக்க விரும்பவில்லை என்று ஆதங்கமான ஒரு பதிவை அவர் செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் நடிகர் அனுராக் காஷ்யப் ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இனிமேல் என்னை 10 முதல் 15 நிமிடங்கள் வரை சந்தித்து பேச வேண்டும் என்றால், ஒரு லட்சம் ரூபாய், அதுவே அரைமணி நேரம் என்றால் 2 லட்சம் ரூபாய், ஒரு மணி நேரத்துக்கு என்றால் 5 லட்சம் ரூபாய் என்பதுதான் என்னுடைய ரேட் என்று அதில் தெரிவித்துள்ளார்.

உங்களால் பணத்தை அட்வான்ஸ் ஆக கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள். இல்லை என்றால் விலகி இருங்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு தெரிவித்து இருக்கிறார். வழக்கமாக நடிகர்கள் படத்தில் நடிக்க தான், சம்பளம் நிர்ணயம் செய்வார்கள். ஆனால் பிரபல நடிகரான அனுராக் காஷ்யப் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு இப்படி கட்டணம் நிர்ணயம் செய்திருப்பதை பார்த்து, ரசிகர்கள் கதிகலங்கி போயிருக்கின்றனர். இவர் ஏன் இப்படி வில்லங்கமாக யோசிக்கிறாரு, என்றும் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்