தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பலருக்கும் பரீட்சையம் ஆனவர் நடிகை பிரியா பவானி சங்கர். அவர் பங்கேற்றதன் மூலமாகவே அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அங்கிருந்து தனது நடிப்பிற்கான பயணத்தை நடிகை தொடங்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அவரை வெள்ளித் திரைக்கு அழைத்து வந்தார் இயக்குனர் ரத்தினகுமார். காதல் திரைப்படமாக வெளியான இது, ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. பிரியா பவானிசாகர் தனது முதல் திரைப்படத்திலேயே, தனக்கான ரசிகர்களை சம்பாதித்தார்.
அந்த திரைப்படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் பலர் தெரிவித்தனர். இதற்கு அடுத்த ஆண்டு கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் அவர் நடித்தார். இதில் அவர் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், அவருக்கென ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தைதான் இயக்குனர் பாண்டிராஜ் அளித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று இதனை நூறு சதவீதம் அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு படம் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் ப்ரியா பவானிசங்கருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கருக்கு அது வெற்றிப்படமாக அமைந்தது.
இதன் பிறகு, மாஃபியா, களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட திரைப்படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இடையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற, பிரியா பவானி சங்கர் அதில் பெயருக்கு வந்து போனார். இந்த நிலையில் சமீப காலமாக பிரியா நடித்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியையே அடைந்து வருகின்றன.
இந்தியன் 2வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இது குறித்து பலரும் அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு நடிகை பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான பிறகு ரசிகர்கள் என்னை திட்டியது மிகுந்த மன வேதனையை கொடுத்தது. கமல் சார் சங்கர் சார் இருக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது அதை எந்த ஒரு பெண் கதாபாத்திரமும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு நான் இங்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார். நடிகையின் இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





