- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென சரிந்த மேடை... நூலிழையில் காயங்களுடன் உயிர் தப்பிய பிரபல நடிகை... வீடியோவை பார்த்து பதறிப்போன...

திடீரென சரிந்த மேடை… நூலிழையில் காயங்களுடன் உயிர் தப்பிய பிரபல நடிகை… வீடியோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் தற்போது மிகுந்த கவனம் பெற்றிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். 2019 ஆம் ஆண்டு சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த அவர், கடந்த ஐந்து வருடங்களில் மாபெரும் உச்சத்தை அடைந்திருக்கிறார்.

 

- Advertisement -

கன்னட சினிமாவில் வெளியான ஒன்த் கத்தே ஹெல்லா என்னும் திரைப்படத்தின் மூலம்தான் அவர் அறிமுகமானார். ஆனால் அந்த படம் நடிகைக்கு பெரிய பெயரை பெற்று தரவில்லை. இந்த நிலையில் அதே ஆண்டில் தெலுங்கில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன்.

 

- Advertisement -

நானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதன் மூலம் பலராலும் அறியப்பட்ட நடிகையானார் பிரியங்கா மோகன். இந்த திரைப்படத்தின் வெற்றி அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்தது. அதன் மூலமாக சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்த இரண்டு திரைப்படங்களில் ஜோடியானார்.

 

இதில் முதலில் வெளியான திரைப்படம் டாக்டர். நெல்சன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கொரோனா காலத்தில் வெளியான இந்த திரைப்படம், டார்க் ரக காமெடியை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனையும் படைத்தது.

 

இதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்தார். இந்தத் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், தனுசுடன் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

 

தற்போது அவர் தெலுங்கில் நடித்த சரிபோதா சானிவரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜெயம் ரவியுடன் அவர் நடித்திருக்கும் பிரதர் திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் நகரில் உள்ள மால் ஒன்றின் திறப்பு விழாவில் பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் அவர் எங்கிருந்தபோது திடீரென அது சரிந்தது. ரசிகர்களை பதற வைத்த இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் சிறு காயங்களுடன் நடிகை உயிர் பிழைத்தார். தற்போது நலமுடன் இருப்பதாக நடிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்