- Advertisement -
Homeபொழுதுபோக்குநாட்டில் குற்றங்கள் அதிகரிக்க அதுதான் காரணம்… அப்படி செஞ்சா எல்லா குற்றங்கள் தானாக குறையும் -...

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க அதுதான் காரணம்… அப்படி செஞ்சா எல்லா குற்றங்கள் தானாக குறையும் – நடிகர் அர்ஜூன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நடிகர்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்தும் ஆக்சன் கிங் அர்ஜூனும்தான். அவர்கள்தான் அந்நிய நாட்டு சதிகளை முறியடித்து இந்தியாவை காப்பாற்றும் தேசப்பற்று மிக்க படங்களில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றவர்கள்.

அந்த வகையில் ஜெண்டில்மேன் முதல்வன் ஜெய்ஹிந்த் சேவகன் என பல படங்களில் நடிகர் அர்ஜூன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர். சண்டை காட்சிகளில் பெரும்பாலும் டூப் இல்லாமல் நடிப்பதால் நடிகர் அர்ஜூனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆக்சன் கிங் என்ற பட்டப் பெயர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் அர்ஜூன் நடித்த பிரதாப் ரோஜாவை கிள்ளாதே ஆயுதபூஜை கர்ணா என பல படங்கள் பெரிய வெற்றிகளை பெற்ற நிலையில் இப்போது 62 வயதுகளை கடந்துவிட்டார். மங்காத்தா இரும்புத்திரை லியோ விடாமுயற்சி போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்த அர்ஜூன் இனி ரசிகர்களின் விரும்பாததால் வில்லன் கேரக்டரில் நடிப்பதில்லை என்றும் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராக தயாரிப்பாளராக உள்ள நடிகர் அர்ஜூனின் சம்பந்தி நடிகர் தம்பி ராமையா. அவரது மகன் உமாபதிதான் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை சமீபத்தில் திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருமகன் உமாபதி நடிக்கும் ஒரு படத்தை விரைவில் அர்ஜூன் தயாரித்து இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் கூறியதாவது, நம் நாட்டில் சிஸ்டம் சரியாக இல்லை. அதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது. துபாயில் தப்பு செய்தால் உடனே வெட்டி விடுவார்கள். அந்த மாதிரி இந்தியாவில் சிஸ்டம் இல்லை. தப்பு பண்ணினவனுக்கு அப்பவே தண்டனை கொடுக்கணும்.

ஆனால் அப்படி இங்கே செய்வது இல்லை. தப்பு பண்ணினவனுக்கு எத்தனை வருஷம் கழிச்சு தண்டனை கிடைக்குது? இப்படிப்பட்ட சிஸ்டம் மாற வேண்டும். அதுவரைக்கும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். அதை தடுக்கவோ குறைக்கவோ முடியாது என்று அந்த நேர்காணலில் நடிகர் அர்ஜூன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்