- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்பி வந்த உதவி இயக்குனரை கைவிட்ட சிவகார்த்திகேயன், கைக்கொடுத்து தூக்கி விட்ட பிரபல நடிகர், அடடா

நம்பி வந்த உதவி இயக்குனரை கைவிட்ட சிவகார்த்திகேயன், கைக்கொடுத்து தூக்கி விட்ட பிரபல நடிகர், அடடா

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “மாவீரன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற தீபாவளி அன்று “அயலான்” திரைப்படம் வெளிவரவுள்ளது. மேலும் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் தன்னை நம்பி வந்த ஒரு உதவி இயக்குனரை அவர் கைவிட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அசோக் குமார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக ஒரு கதையை தயார் செய்திருந்தாராம்.

- Advertisement -

அந்த கதையை சிவகார்த்திகேயனிடம் சென்று கூறியபோது அவரும் ஓகே என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்தார்களாம். எனினும் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் அந்த படத்தை தயாரிப்பாதாக முடிவானதாம். அந்த படத்திற்கு ஒரு மாஸ் ஆன டைட்டிலும் வைத்தார்களாம்.

ஆனால் இடையில் சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பாளர் ராஜேஷுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாம். ஆதலால் அந்த படத்தை தான் தயாரிக்கவில்லை என்று ராஜேஷ் விலகிக்கொண்டாராம். ஆனால் சிவகார்த்திகேயனோ வேறு ஒரு தயாரிப்பாளரை அணுகாமல், அந்த புராஜெக்ட்டையே கைவிட்டுவிட்டாராம்.

- Advertisement -

இவ்வாறு அனைவரும் கைவிட்ட நிலையில் அசோக் குமார் இருக்க, ஆர்.ஜே.பாலாஜி அவரது கதையை கேட்டாராம். அவருக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் அத்திரைப்படத்தில் நடிப்பதாக கூறிவிட்டாராம். அத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்களாம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்