- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளிக்கு கண்டிப்பாக விடாமுயற்சி ரிலீஸ் கிடையாது, லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்...

தீபாவளிக்கு கண்டிப்பாக விடாமுயற்சி ரிலீஸ் கிடையாது, லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் – படத்துல வில்லனா நடிக்கற அவரே உறுதியாக சொல்லிட்டாரே? ஏமாற்றத்தில் ஏகே ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். இயக்குனர் எச் வினோத் இயக்கிய வலிமை படத்துக்கு பிறகு, நடிகர் அஜித்குமார் நடிப்பில், கடைசியாக வெளிவந்த படம் துணிவு, இந்த படத்தையும் எச் வினோத் தான் இயக்கி இருந்தார். துணிவு படம் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதம் வெளியானது.

இப்போது 2024ம் ஆண்டு துவங்கி 8 மாதங்கள் கடந்து விட்டது. துணிவு படத்துக்கு பிறகு 20 மாதங்கள் கடந்தும் இன்னும் அஜித் குமார் நடித்த அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை. கடந்தாண்டில் அக்டோபர் மாதத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துவங்கியது. ஆனால் இயக்குனர் மகிழ்திருமேனி காட்டும் அலட்சியத்தால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இதனால் அஜித்குமார் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

துணிவு படம் வெளியான அதே நாளில்தான் நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் ரிலீஸ் ஆனது. அதன்பிறகு கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. இப்போது இந்த மாதத்தில் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் விஜய் நடிப்பில் வெளியானது. துணிவுக்கு பிறகு விஜய் நடித்த லியோ, தி கோட் என 2 படங்கள் வந்த நிலையில், அஜீத் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

எப்படியும் வருகிற தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே எடிட் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுத்தால் போதும். தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று தகவல்கள் வெளியான நிலையில், இப்போது அது இல்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகாது என்ற உறுதியான தகவல், தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடித்து முடித்தோம். தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி திரைக்கு வரும் என்று கூறியிருக்கிறார்.

அதனால் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 24 அல்லது 25ம் தேதிகளில் விடாமுயற்சி திரைக்கு வரும் என்று தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அஜீத்குமாருடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஆனால் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த ஏகே ரசிகர்களுக்கு இப்படி ஒரு பலத்த ஏமாற்றம் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்