- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி சொல்லிய வார்த்தைகள், விஜய்க்கும் சேர்த்துதான் - இது...

அரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து நடிகர் அரவிந்த்சாமி சொல்லிய வார்த்தைகள், விஜய்க்கும் சேர்த்துதான் – இது வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

நடிகர் அரவிந்த் சாமி, தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு கலைஞன். அழகிலும், நடிப்பிலும், கம்பீரத்திலும், பேச்சிலும் மிக தெளிவானவர். ரோஜா படத்தில் துவங்கி, சமீபத்திய தனி ஒருவன், போகன் படங்கள் வரை அரவிந்த் சாமியின் அழகும், கெத்தும் இன்னும் குறையவில்லை. இன்னும் பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் குறித்து நடிகர் அரவிந்த் சாமி சில முக்கியமான கருத்துகளை, அவரது உணர்வுகளை வௌிப்படையாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அரவிந்த் சாமி கூறியிருப்பதாவது, நான் ரஜினிக்கு பெரிய ரசிகன். அதுபோல் கமலுக்கும் மிகப்பெரிய ரசிகன். விஜய் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களை பிடிக்கும் என்பதற்காக நான் அவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டேன். அப்படி போடவும் கூடாது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நான் அப்படி ஓட்டுப்போட மாட்டேன்.

நீங்கள் சொல்கிற விஷயங்களில் ஏதாவது மாற்றங்கள் வரப்போகிறதா என்பது எனக்கு ரீச் ஆக வேண்டும். நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம். நீங்கள் அரசு சம்பந்தப்பட்ட பாலிசிகளை டிராப்ட் செய்வதற்கு உங்களிடம் என்ன தகுதிகள் இருக்கிறது என்பதை எப்படி நான் நம்ப முடியும்.

- Advertisement -

உங்களுக்குள் நல்ல எண்ணங்கள் இருக்கலாம். சினிமாவில் காட்டிய ஹீரோயிசத்தை நிஜத்திலும் காட்டி மக்களுக்கு நன்மை செய்யலாம் என நீங்கள் நினைத்திருக்கலாம். அப்படித்தான் பொதுவாழ்விலும் இருப்போம் என்று நினைத்துக்கூட அரசியலில் இறங்கியிருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கான தகுதி குறித்த புரிதல் இருக்குமா என்பதுதான் கேள்வி.

ஆனால் உங்களால் எதுவுமே பண்ண முடியாது என்றும் சொல்ல வரவில்லை. செய்ய முடியும். உங்களை சுற்றி பெரிய கூட்டம் இருக்கலாம். நிறைய நல்ல மனிதர்கள் இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் பற்றி நீங்கள் ஒரு தலைவராக தெரிந்துக்கொண்ட பின்னரே இதில் நிலைத்திருக்க முடியும் என்று நடிகர் அரவிந்த்சாமி பேசியிருப்பது, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்