- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்தப் படத்துக்கு அப்புறம், கார்த்தி மறுத்த கதையில நான் நடிக்கிறதே இல்லை... உண்மையை உளறி கொட்டிய...

அந்தப் படத்துக்கு அப்புறம், கார்த்தி மறுத்த கதையில நான் நடிக்கிறதே இல்லை… உண்மையை உளறி கொட்டிய ஆர்யா… சரி, அது என்ன படம் தெரியுமா…..

- Advertisement -

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா. முதல் திரைப்படத்திலேயே வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருந்ததால் கவனத்தை ஈர்த்த ஆர்யாவுக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், வட்டாரம், ஓரம்போ உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்தார். இதில் பட்டியல் திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் சுமாரான விமர்சனத்தையே பெற்றன.

இதன்பிறகு ஆர்யாவுக்கு இயக்குனர் பாலாவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அஜித் மறுத்த கேரக்டர் ஆர்யாவுக்கு சென்றதால் நான் கடவுள் திரைப்படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. படம் முழுக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ஆர்யா, திரை உலகில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.

- Advertisement -

இப்படி இருக்க 2010 ஆம் வருடம் அவருக்கு பொன்னான வருடமாக அமைந்தது. அந்த ஆண்டு மதராசபட்டினம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கர் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி ஆர்யாவின் கேரியரை உயர்த்தியது. இதன்பிறகு வேட்டை, ராஜா ராணி என அவ்வப்போது சில வெற்றிகளை அவர் கொடுத்து வந்தார்.

கடைசியாக ஒரு வெற்றிப் படம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த ஆர்யாவுக்கு, பா ரஞ்சித்தின் சார்பாட்டா பரம்பரை திரைப்படம் திருப்புமுனையை கொடுத்தது. தற்போது அவர் மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வெயில் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில், அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆர்யா,

- Advertisement -

கார்த்தி இப்போதுதான் 25வது திரைப்படத்திற்கே வருகிறார் ஆனால் அவருடைய மதிப்பு மிக சிறப்பாக உள்ளது. ஒரு முறை கார்த்திக்கு சென்ற கதையில், நான் நடித்தேன். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தெரிந்தது எதற்கு அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று. சரியான கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதன் பிறகு கார்த்தி மறுத்த கதைகளில் நான் நடிப்பதே இல்லை என்று பேசினார். ஆர்யாவின் இந்த பேச்சு நிகழ்ச்சியில் கலகலப்பூட்டியது.

இதனில் அவர் எந்த படத்தைப் பற்றி பேசி இருப்பார் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிச்சயம் அது, முத்தையா இயக்கத்தில் வெளியான காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கமாகத்தான் இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். இல்லை இல்லை அது ராஜேஷ் எடுத்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படம் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்