- Advertisement -
Homeபொழுதுபோக்குமுந்திக்கொண்ட உலக அழகி ஐஸ்வர்யா ராய் - என்னோட ஆசை நிறைவேறலையே, என்று ரசிகர்களிடம் வருத்தப்பட்ட...

முந்திக்கொண்ட உலக அழகி ஐஸ்வர்யா ராய் – என்னோட ஆசை நிறைவேறலையே, என்று ரசிகர்களிடம் வருத்தப்பட்ட நடிகை சிம்ரன்

- Advertisement -

நடிகை சிம்ரன், கடந்த 1990களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நாயகியாக வலம் வந்தவர். டைரக்ட் வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே சிம்ரன் தன் அழகால், நடிப்பால், நடனத்தால் ரசிகர்கள் தன்பக்கம் இழுத்து வசீகரித்து விட்டார் என்பது உண்மை.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார் சிம்ரன். குறிப்பாக வாலி, ப்ரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், ஒன்ஸ்மோர், அவள் வருவாளா, பஞ்ச தந்திரம், ரமணா, வாரணம் ஆயிரம் என முன்னணி நாயகர்களுடன் நடித்து, டாப் ஸ்டார் நடிகையாக மாறினார்.

- Advertisement -

இதில் வாலி, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற பல படங்களில் சிம்ரனின் நடிப்பு வேற லெவலில் இருந்ததாக பாராட்டைப் பெற்றார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சிம்ரன் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிமுக ஆதரவாளராக ஜெயலலிதாவுக்காக ஒரு கட்டத்தில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரமும் செய்தார்.

டைரக்டர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சூர்யா, சியான் விக்ரமுடன் ஒரு பாடல்காட்சிக்கு நடனமாடி ரசிகர்களை அசத்தினார். அடுத்து சீமராஜா படத்தில் வில்லி கேரக்டரிலும் நடித்தார். சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடிக்க வேண்டிய கேரக்டரில் முதலில் தேர்வானது சிம்ரன்தான். அவர் பிஸியாக இருந்ததால், ஜோதிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் சிம்ரன், விக்ரமுடன் மகான் படத்திலும் ஆர்யாவுடன் கேப்டன் என்ற படத்திலும் நடித்திருந்தார். அத்துடன் பிரசாந்த் நடிப்பில் வெளிவர உள்ள அந்தகன் படத்திலும், விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்திலும் சிம்ரன் நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.

நடிகர் சிம்ரன், சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கிறார். அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, நடன வீடியோக்களை ஷேர் செய்கிறார். அதுவும் வைரலாகின்றன. இப்போது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன் ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சிம்ரன், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில், நந்தினி கேரக்டரில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன், என வருத்தப்பட்டிருக்கிறார். அந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

- Advertisement -

சற்று முன்