- Advertisement -
Homeபொழுதுபோக்குசெல்வராகவன் படத்தில் மீண்டும் நடிக்க மாட்டேன், ஓபனாக சொன்ன பிரபல நடிகை - அப்செட் ஆன...

செல்வராகவன் படத்தில் மீண்டும் நடிக்க மாட்டேன், ஓபனாக சொன்ன பிரபல நடிகை – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்யாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் கார்த்தி ரீமாசென் ஆண்ட்ரியா பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். 2010ம் ஆண்டில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கல்ட் கிளாஃசிக் படமாக உள்ளது.

இந்தப் படத்தின் 2ம் பாகத்தை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தில் ஆண்ட்ரியா ரீமாசென் இருவரும் இரட்டை கதாநாயகிகளாக நடித்திருந்தனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை ஆண்ட்ரியாவிடம், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் படம் குறித்து கேட்கப்பட்டது.

- Advertisement -

அதுகுறித்து பேசிய ஆண்ட்ரியா, ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நான் நடிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அந்தப் படம் 2ம் பாகமாக உருவாவது எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதில் நான் நிச்சயமாக இருக்க மாட்டேன். அதற்கு காரணம் இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிவது மிகவும் கடினமான விஷயம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் சுமார் 200 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த அனுபவம் எனக்கு அதற்கு பின் நடித்த படங்களில் நடிப்பதை கச்சிதமாகவும் எளிதாகவும் மாற்றியது என்றும் ஆண்ட்ரியா அப்போது கூறியிருக்கிறார். இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடிப்பது நல்ல அனுபவம் ஒரு சிறந்தபயிற்சி என்று கூறிய ஆண்ட்ரியா, ஆனால் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்க மாட்டேவ் என்பதையும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் உருவாகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை இல்லை. வருகிறது. இந்த சூழலில் நடிகை ஆண்ட்ரியாவின் இந்த வெளிப்படையான பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையாக மட்டுமின்றி இசை கச்சேரிகளில் பாடகியாக கவனம் செலுத்தி வரும் ஆண்ட்ரியா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் மனுசி, இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன.

- Advertisement -

சற்று முன்