- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகா சென்டர் திறந்தால் யாராவது கேள்வி கேட்கிறோமா? நடிகர் விஜய் குறித்து விமர்சித்து பேசிய பிரபல...

யோகா சென்டர் திறந்தால் யாராவது கேள்வி கேட்கிறோமா? நடிகர் விஜய் குறித்து விமர்சித்து பேசிய பிரபல வில்லன் நடிகர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதில்லை என்ற முக்கிய முடிவை ஏற்கனவே அறிவித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய், எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை லட்சியமாக கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இருந்து இதுவரை பல நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். சினிமாவில் இமேஜ் இல்லாத நிலையில் டிவி சீரியலுக்கு போகாமல் ஏதேனும் ஒரு முக்கிய கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ எம்பி ஆவது ஒரு தரப்பு நடிகர் நடிகைகள் என்றால் பெரிய நடிகர்கள் சிலர் அவர்களே சொந்தக் கட்சி ஆரம்பித்து தோற்ற கதைகளும் நடந்திருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் நடிகர்கள் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் கமல்ஹாசன் டி ராஜேந்தர் நவரச நாயகன் கார்த்திக் மன்சூர் அலிகான் கருணாஸ் சரத்குமார் என சொந்தக் கட்சி ஆரம்பித்து சூனியம் வைத்துக் கொண்டவர்கள் நிறைய பேர் உண்டு. சினிமாவை போலவே அரசியலிலும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்கள் இவர்கள்.

ஆனால் இந்த வரிசையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இருவரும் அரசியலுக்கு வந்த போது மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பையும் பிரமாண்டமான ஆதரவையும் பெற்றனர். எம்ஜிஆர் 3 முறை தமிழக முதல்வராக அவர் இறக்கும் வரை ஆட்சி செய்தார். விஜயகாந்த், அவரது கட்சி சந்தித்த 2வது தேர்தலிலேயே எதிர்கட்சி தலைவரானார்.

- Advertisement -

அதே போல் இப்போது நடிகர் விஜய்க்கும் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதிமுக திமுக என 2 திராவிட கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் மக்களின் வறுமை நிலை வேலையில்லாத திண்டாட்டம் மறையாத நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததை பலர் பாராட்டினாலும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்கவே செய்கின்றனர். விஜய் அரசியலுக்கு தகுதியற்றவர் என்றும் கூறி வருகின்றனர்.

தூள் கில்லி பகவதி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கூறியதாவது, நான் எப்படி எதையும் யோசிக்காமல் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேனோ அதையே தான் விஜய்யும் செய்கிறார். அது அரசியல் என்பதால்தான் நாம் கேள்வி கேட்கிறோம். வேறு ஏதேனும் என்றால் இப்படி கேட்டிருக்க மாட்டோம். நாளையே யாரேனும் நான் ஒரு யோகா சென்டர் திறக்க போகிறேன் என்றால் நாம் எதுவும் சொல்ல மாட்டோம். விஜய் தன் மனதுக்கு பிடித்ததை செய்கிறார். அந்த எண்ணத்தை பாராட்டுவோமே என்று நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்