- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் அந்த கேரக்டரில் நான் நடிச்சது பெரிய தவறு, இப்பவும் அந்த பாதிப்பு...

அந்த படத்தில் அந்த கேரக்டரில் நான் நடிச்சது பெரிய தவறு, இப்பவும் அந்த பாதிப்பு எனக்கு இருக்கு – லப்பர் பந்து கெத்து தினேஷ் இப்படி வருத்தப்பட்டு பேசியிருக்காரே?

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதால் அட்டக்கத்தி தினேஷ் என்றே அழைக்கப்படுகிறார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய முதல் படமும் இதுதான். இந்த படத்தில்தான் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், கலையரசன் போன்றவர்களும் அறிமுகமாகினர்.

அட்டக்கத்தி படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை, ராஜூ முருகன் இயக்கத்தில் குக்கூ மற்றும் ஒரு நாள் கூத்து, அண்ணனுக்கு ஜே, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கபாலி உள்ளிட்ட பல படங்களில் அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்தனர். இதில் கெத்து கேரக்டரில் கிரிக்கெட் விளையாடும் பூமாலை கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நாயகியின் அப்பாவாக அழுத்தமான நடிப்பை தினேஷ் வெளிப்படுத்தியிருந்தார்.

ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான படம் குக்கூ. இந்த படத்தில் கண் பார்வை தெரியாத கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்தார். கண்ணின் கருவிழிகளை சுருக்கியபடி படம் முழுவதும் கண்பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி போலவே நடிப்பில் அசத்தியிருந்தார்.

- Advertisement -

அப்படி படப்பிடிப்பு முழுவதும் பல மாதங்கள் கண்களை சுருக்கியபடி பார்வை இழந்தவர் கேரக்டரில் நடித்ததால் கண் பார்வையில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு தினேஷ் துன்பப்பட்டுள்ளார். லப்பர் பந்து படத்தில் கூட அவரது கண்களில் ஒருவித சோர்வு தெரியும். பல காட்சிகளில் கண்களில் உயிர்ப்பு குறைவாக தெரியும். அதை படம் பார்ப்பவர்கள் நன்றாக கவனித்து பார்த்தால்தான் புரியும்.

இதுகுறித்து அட்டக்கத்தி தினேஷ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, குக்கூ படத்தில் நான் கண் தெரியாத அந்த கேரக்டரில் நடித்திருக்க கூடாது. இப்போது கேட்டாலும் நான் அதை தப்பு என்றுதான் சொல்வேன். அப்படி நடித்ததால் 5 ஆண்டுகளாக கண் பார்வையில் பிரச்னை ஏற்பட்டது. தலைவலியால் அவதிப்பட்டேன். கண்ணில் அப்பப்போ தண்ணீ வழிஞ்சுக்கிட்டே இருக்கும். இப்போது வரைக்கும் கண்ணில் எனக்கு அந்த பிரச்னை இருக்கிறது, என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்