தவமின்றி கிடைத்த வரமே, இனி எல்லாம் வாழ்வில் சுகமே இந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அன்பு என்ற படத்தில் இடம்பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான் நடிகர் பாலா.
இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சொந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா அஜீத்குமார் நடித்த விஸ்வாசம், விவேகம், வீரம், கார்த்தி நடித்த சிறுத்தை, ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கியவர். பல வெற்றிப் படங்களை தந்த இவரது இயக்கத்தில் கங்குவா படமும் உருவாகி உள்ளது.
வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள, சூர்யா நடித்த கங்குவா படத்தின் இயக்குனர்தான் சிறுத்தை சிவா என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொந்த தம்பியான நடிகர் பாலா தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2019ம் ஆண்டில் அம்ருதா என்பவரை நடிகர் பாலா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பாலா தனது மனைவி அம்ருதாவை விவாகரத்து செய்தார். ஆனால் மகள், அம்ருதாவுடன் இருந்து வருகிறார். பாலா, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலா, அதன் பிறகு 2021ம் ஆண்டில் 2ம் திருமணம் செய்து கொண்டார். எலிசபெத் என்ற டாக்டரை 2வது திருமணம் செய்த நடிகர் பாலா அதன் பிறகு தனது முதல் மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் பாலா, விவாகரத்து செய்த நிலையிலும் தனது முதல் மனைவியையும், மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இன்று காலை போலீசார் நடிகர் பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் மற்றும் மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





