- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கேட்காமலே மாச மாசம் அவர்தான் எனக்கு 15000 ரூபாய் போட்டு விடுறாரு - பவா...

நான் கேட்காமலே மாச மாசம் அவர்தான் எனக்கு 15000 ரூபாய் போட்டு விடுறாரு – பவா லட்சுமணன் பேட்டி

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான பவா லட்சுமணன் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகள் மேனேஜராக பணியாற்றியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸில் அவர் பணியாற்றி வந்த வேளையில் அவரது இயல்பான நடவடிக்கைகள் இயக்குனர்களுக்கு பிடிக்கவே அவர் காலப்போக்கில் நடிகராகவும் மாறினார். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்தே பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் மாயி படத்தில் நடித்த போது காமெடி நடிகராக மிகப் பிரபலமானார்.

மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் போது அவர் பேசும் வாமா மின்னல் என்பது பட்டி தொட்டி எங்கும் அவரை ஹிட்டாக்கியது. அதன் பின்பு ஆனந்தம் படத்தில் நடித்த பவா லட்சுமணன் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்த அவர் தமிழ் சினிமாவின் காமெடி நடிகராகவும் முன்னேறினார்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக ஒரு புறம் நடித்து வந்தாலும் திருமணம் செய்து கொள்ளாத அவர் சர்க்கரை நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி காணப்பட்டார். சமீபத்தில் அவர் உடல் நலம் இன்றி இருந்தபோது ஏகப்பட்ட பிரச்சனைகள் அவருக்கு ஏற்பட்டன. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு இருந்தார்.

இப்படி பிரபலமான நடிகராக இருந்தும் உதவி கேட்கும் அளவிற்கு அவர் பேசியிருந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ச்சியாக அவருக்கு உதவிகள் குவிந்திருந்த வேளையில் தற்போது தான் கஷ்டப்பட்டு வந்த வேளையில் தனக்கு உதவியவர்கள் என்ன செய்தார்கள்? என்பது குறித்தும் மாதாமாதம் உதவி செய்பவர்கள் குறித்தும் அவர் பேட்டி ஒன்றினையும் அளித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நடிகர் ஜீவா எனக்கு தற்போது மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் அக்கவுண்டில் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் சூப்பர் ஹிட் பிலிம்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர் சிறு பையனாக இருந்தார். அப்போது ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போதே நான் அவரை பார்த்திருக்கிறேன். நான் அவருடைய குடும்பத்தில் வேலை பார்த்ததால் அவருக்கு என் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது.

ஒரு கட்டத்தில் எனக்கு வாய்ப்புகள் குறைந்து நான் தற்போது கஷ்டப்பட்டு வரும் வேளையில் ஜீவா எனக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி வருகிறார். உதவி வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டதில்லை ஆனா அவராகவே எனக்கு பணம் அனுப்பி வருகிறார். மேலும் என்னுடைய உடல் நலம் சரியில்லாத போது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று இருந்த வேளையில் ஆர்.பி சவுத்திரி எனக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளார் என்று அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்