நடிகை ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர். பின் சில படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரலாக ஒலித்தார்., நாளடைவில் நடிகையாக வண்ணத்திரையில் தோன்றினார். ஆண்ட்ரியா முதன்முதலாக நடிகையாக அறிமுகமான படம் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம். இதில் சரத்குமார் மனைவியாக நடித்திருப்பார்.
கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படப்பாடலில் பெண் குரலாக ஒலிப்பது ஆண்ட்ரியா குரல்தான். வேட்டையாடு விளையாடு, ஆடுகளம் படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி பேசியவர் ஆண்ட்ரியா தான். செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில், இரட்டை கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, ரீமா சென் நடித்திருந்தனர்.
படங்களில் பின்னணி பேசவும், பாடல்களை பாடவும் ஆர்வம் காட்டி ஆண்ட்ரியா தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததால் விஸ்வரூபம், உத்தம வில்லன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அன்னையும் ரசூலும் என்ற மலையாள படத்திலும் அவர் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் நிச்சயம் அது திரையில் வெளிப்பட்டால் ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கும். அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி தான் ஆண்ட்ரியாவுக்கு தொடர்ந்து படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளிலும் ஆண்ட்ரியா பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வடசென்னை படத்தில் இயக்குநர் மற்றும் அமீருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருப்பார். சந்திரா என்ற கேரக்டரில் நடித்த அவர், தன் கணவர் அமீரை கொன்றவர்களை பழிவாங்குவார். இந்த கேரக்டரில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியவர் ஆண்ட்ரியா.
சமீபத்தில் வடசென்னை படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா, வடசென்னை படத்தில் இயக்குநர் அமீர் எனக்கு கணவராக நடித்திருந்தார். ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மிகவும் கூச்சப்பட்டார். ஒரு பெண் ஆன நானே கூச்சப்படாமல் நடித்தேன். இவர் ஏன் இப்படி கூச்சப்படுகிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவருக்கு லவ் சீன்களில் நடித்து அனுபவம் இல்லை. அதனால் அவர் கூச்சப்பட்டிருக்கலாம். ஆனால் எனக்கு அந்த அனுபவம் நிறைய இருக்கிறது, என்றார்.





