- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் சொன்னா தான் நீங்க சாப்பிடுவீங்களா? அவர் சொன்னா தான் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? - விளாசித்...

அவர் சொன்னா தான் நீங்க சாப்பிடுவீங்களா? அவர் சொன்னா தான் கல்யாணம் பண்ணிக்குவீங்களா? – விளாசித் தள்ளிய பிரபல நடிகர்!

- Advertisement -

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியானால், சில நாளிதழ்களில் வார பத்திரிகைகளில் அந்த படம் குறித்த விமர்சனம் வரும். அதற்கு சில தினங்கள் ஆகும். அதுவும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே அந்த விமர்சனங்களை பற்றி படித்து தெரிந்துக்கொள்ள முடியும். அதனால் பெரும்பாலான மக்கள், படம் பார்த்தவர்கள் சொல்லும் விமர்சனங்களை வைத்தே ஒரு படத்துக்கு போலாமா, வேண்டாமா என முடிவு செய்வார்கள்.

ஆனால் ஆண்ட்ராய்டு யுகமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில், படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே படம் சுமார், மொக்கை, சூப்பர் என ரசிகர்களே விமர்சகர்களாக மாறி, படம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி விடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி பார்த்து வெளியே வருபவர்கள் சொல்லும் விமர்சனம்தான் ஒரு படத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி ப்ளு சட்டை மாறன் போன்ற யூடியூபர்களும் படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர். தங்கலான் படத்தை தொங்கலாம் என்கின்றனர். இந்தியன் 2 படத்தை தாத்தா ரசிகர்களை கதற விட்டு விட்டார் என்கின்றனர். கங்குவா படத்தை கத்தவா என்றும் விமர்சித்திருந்தனர்.

இப்படி புதிய ரிலீஸ் படங்களுக்கு எதிரான விமர்சனங்கள் அந்த படங்களை ஓரிரு தினங்களிலேயே காலி செய்து விடுகின்றன. அதற்கு உதாரணமாக இந்தியன் 2, வேட்டையன், தி கோட், கங்குவா, தங்கலான் என பல படங்கள் எதிர்மறையான விமர்சனங்களில் சிக்கின. இதில் தி கோட், வேட்டையன், தங்கலான் படங்கள் அதையும் தாண்டி வசூலில் சாதனை படைத்தன.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் மற்றும் சார் படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஒரு திரைப்படம் நல்ல படமா, மோசமான படமா என்பதை அவர்கள் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும். ப்ளு சட்டை மாறன் போன்ற விமர்சகர்களின் பேச்சை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடாது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி போஸ் வெங்கட் கூறுகையில், நீங்கள் தினமும் என்ன சாப்பிட வேண்டும் என்று ப்ளு சட்டை மாறனை கேட்டுட்டா சாப்பிடறீங்க, அவர் சொன்னாதான் நீங்க சோறு சாப்பிடுவீங்களா, அவர் சொன்னா தான் கல்யாணம் பண்ணிக்குவீங்களா நமக்குன்னு சொந்த அறிவு இருக்கிறது. உங்கள் அறிவை எடை போடதான் சினிமா இருக்குது. தியேட்டருக்கு போய் படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை, சிவாவை திட்டணுமா, திட்டுங்க என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்