- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துல வர்ற அந்த டயலாக் என்னோடது, நடிகர் வடிவேலுவை பார்த்து நான் சொன்னது, நாம்...

விஜய் படத்துல வர்ற அந்த டயலாக் என்னோடது, நடிகர் வடிவேலுவை பார்த்து நான் சொன்னது, நாம் தமிழர் கட்சி சீமான் செய்த காமெடி – எப்படி எல்லாம் கம்பி கட்றாரு பாருங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக பாஞ்சாலங்குறிச்சி, தம்பி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீமான். இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். இயக்குனராக இருந்த சீமான் பிறகு பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிறகு நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி, தமிழக அரசியல் களத்தில் பயணித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களை தனித்து எதிர்கொள்ளும் சீமான், எம்பி, எம்எல்ஏ என வெற்றி பெறாவிட்டாலும் அவரது கட்சிக்கு கவுரமான ஓட்டுகள் கிடைத்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி முதல் அரசியல் மாநாடு நடத்திய நடிகர் விஜயை, சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆரம்பத்தில், என் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று சொன்ன சீமான், இப்போது விஜய் குறித்து தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.

வருகிற 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் திமுகவை எதிர்த்து களத்தில் குதிக்கும் விஜயை, திமுகவினர் கூட வசை பாடாத நிலையில், சீமான் விஜய் குறித்தும் அவரது அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சிக்கொடி குறித்தும் கூட கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் குறித்து நான் பேசியதை வைத்து, தனது கட்சி கொள்கை தலைவர்களாக விஜய் கூறி வருவதாக குற்றம் சாட்டுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கில்லி படத்தில் வரும் செல்லம், ஐ லவ் யூ அந்த டயலாக் நான் சொன்னதுதான்.நடிகர் வடிவேலுவை பார்த்து பாஞ்சாலங்குறிச்சி படத்தை நான் இயக்கிய போது நான் சொன்னது. செல்லம் இங்க வாடி, இங்க நில்லுடி அப்படீன்னு நாங்க வாடி போடீன்னுதான் பேசிக்குவோம்.

இது அப்படியே பரவி விட்டது. அது அப்படி பரவியதால் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசுவது போல் அதை வசனமாக இயக்குனர் எடுத்து வைத்துவிட்டார்.செல்லம்… அது என்னோட பிட்டுதான். நான் போட்ட பிட்டுதான். முதன்முதலா செல்லம்ன்னு சொன்னதே நான்தான் என்று பேசியிருக்கிறார். அப்படியே கங்குவா படம் கதையும் என்னுடையதான்னு சொல்லிடுங்க ப்ரோ என்று விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்