- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரிய வகை லார் கிப்பன் குரங்குடன் விளையாடிய நடிகர் விக்ரம் - 3 நாட்கள்...

அரிய வகை லார் கிப்பன் குரங்குடன் விளையாடிய நடிகர் விக்ரம் – 3 நாட்கள் கெடு விதித்த வனத்துறை அதிகாரிகள், சிக்கலில் சிக்கிய சியான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். சமீபத்தில் அரிய வகை விலங்கினமான லார் கிப்பன் குரங்குடன் விளையாடும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த வீடியோவை உடனடியாக விக்ரம் நீக்கினார்.

வீடுகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்ட இந்த அரிய வகை குரங்கை நடிகர் விக்ரம் எப்படி வளர்த்து வருகிறார் என பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது நடிகர் விக்ரம் தனது சம்பந்தியான தொழில் அதிபர் சிகே ரங்கநாதனின் பண்ணை வீட்டில் அந்த குரங்குடன் வீடியோ எடுத்து பதிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதனின் பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு லார் கிப்பன் வகை குரங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது அந்த குரங்கை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டோம் என்று தொழில் அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெருந்துறையில் உள்ள கேசவநாதன் பண்ணை வீட்டுச் சென்று வனத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் என்பவரிடம் இருந்து மூன்று குரங்குகளை சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும், அதில் ஒன்று இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். தற்போது 2 குரங்குகள் மட்டுமே அவரிடம் இருப்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த அரிய வகை குரங்குகளை வைத்திருப்பதற்கான சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அந்த குரங்குகளை பறிமுதல் செய்து வண்டலூரில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் உயர் அதிகாரிகள், அந்த குரங்குகளை அவர் வாங்கிய மணிப்பூர் நபர் குறித்து விசாரிக்கும்படி கூறியதால் குரங்குகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட வீடியோவில் இருந்த அந்த லார் கிப்பன் குரங்கு இப்போது எங்கே இருக்கிறது? எப்படி இது அவருக்கு கிடைத்தது? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் படி வனத்துறை அதிகாரிகள் அவருக்கு கெடு விதித்துள்ளனர். நடிகர் விக்ரம் குரங்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு சிக்கலில் மாட்டியிருப்பது ரசிகர்களை விரக்தி அடையச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்