தமிழ் சினிமா நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற அவரது கட்சி இப்போது திமுக கூட்டணியில் ஜெயித்த கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. இதில் காங்கிரஸ் விசிக முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தவெக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அதிமுக கட்சியை பிளவுபடுத்தும் விதமாக தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை தனது தவெக கட்சிக்கு விஜய் இழுத்து வருகிறார். இதற்காக கோடிக்கணக்கில் குதிரை பேரம் நடப்பதாக முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி மற்றும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளில் நாளை மறுதினம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் பிரசாரம் செய்தார். வீதி வீதியாக நடந்து சென்றார். ரோட்டோர டீக்கடையில் டீ குடித்தார். டிராக்டர் ஓட்டினார். மாட்டு வண்டியில் பயணித்தார். இன்று தாராபுரத்தில் ஒரு தோட்டத்தில் முருங்கைகாய் பறித்தார். இது எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரு தெருவாக ரோடு ரோடாக நடந்து சென்று வாக்கு சேகரித்த நிலையில், நடிகர் சத்யராஜின் சமூக வலைதலைப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சத்யராஜ் கூறியிருப்பதாவது, தோல்வி பயத்தில் மதுராந்தகம் தாராபுரத்தில் தெருத்தெருவாக நடந்து சென்று மக்களை சந்தித்து இருக்கிறார் விஜய்.
5 மணி நேரம் ரோடு ஷோ நான்கு முறை ஒரே தொகுதிக்கு பரப்புரைன்னு தெருவுக்கு வர வச்சாங்க பாரு. இதுதான் திராவிட இயக்க அரசியல். 5 நிமிடம் பேசினாலே எல்லோரும் கொத்து பரோட்டா தான் என்று எல்லோரும் தோற்பார்கள் என்று பேசிய அவரை வயல்வெளி தெரு டீக்கடை என வரவழைத்தது தான் திராவிட இயக்க அரசியல்.
விஜயின் ஆணவத்தை மக்கள் தவிடு பொபடியாக்கி விட்டார்கள் என்று நடிகர் சத்யராஜ் தனது பதிவில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் தனது விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





