- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை கண்டுக்க ஆளில்லே, விஜயை நம்பி வந்தது தப்பா போச்சே? - நட்சத்திர பேச்சாளருக்கு இப்படி...

என்னை கண்டுக்க ஆளில்லே, விஜயை நம்பி வந்தது தப்பா போச்சே? – நட்சத்திர பேச்சாளருக்கு இப்படி ஒரு நிலமையா? அவரே போட்ட பதிவை பாருங்க!

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் பேசி பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் என்ற வாசகம் ஒரு பொன்மொழியாக எப்போதும் உள்ளது. ஏனென்றால் அரசியல் களம் என்றாலே அங்கே மேடையில் அரசியல்வாதிகள் பேசும் வார்த்தைகளும் அவர்கள் சொல்லும் கருத்துகளும் நாட்டை பற்றிய அவர்களது விமர்சனங்களும் மக்கள் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் எப்போதுமே அரசியல் களத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் என்று சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அதிகளவில் கவனத்தை ஈர்ப்பார்கள். இப்போதும் கூட முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசினால் அவரது வார்த்தை ஜாலத்தில் எதிர்கட்சியினர் கூட தன்னை மறந்து விடுவார்கள் என்று சொல்வதுண்டு. அந்த வரிசையில் அப்போது பேரறிஞர் அண்ணாவின் பேச்சும் பெரிய அளவில் மக்களை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் அரசியல் களத்தில் நட்சத்திர பேச்சாளர்களாக பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். முதலில் மதிமுகவில் இருந்த அவர் பிறகு அதிமுக பக்கம் மாறினார். அதன்பிறகு சமீபத்தில் தவெக கட்சியில் இணைந்தார். அவர் தவெக கட்சிக்கு வந்த போது, இனி தவெக மேடைகளில் அனல் பறக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் தவெக கட்சியை பொருத்த வரை நட்சத்திர பேச்சாளர்கள் என்று யாருமே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் கட்சி தலைவர் விஜய், ஹை பிட்ச்சில் கத்தி பேசுவதே அவரது ஸ்டைலாக மாறிவிட்டது. ராஜ்மோகன் மட்டுமே சற்று வார்த்தை ஜாலம் காட்டி பேசுபவராக இருக்கிறார். மற்றபடி தவெக கட்சியில் குறிப்பிட்டு சொல்லும்படியான பேச்சாளர் யாருமே இல்லை.

- Advertisement -

இந்த சூழலில் தவெக கட்சிக்கு வந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு பெரிய அளவில் வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும். அவருக்கு தவெக கூட்டங்களில் முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நான் தவெக கட்சியில் இருக்கிறேன் என்று சொல்லும் நிலையில்தான் நாஞ்சில் சம்பத் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பதிவியில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? என்னுடைய பகலை எவரும் இருட்டாக்க முடியாது. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது என்று அந்த பதிவில் நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். இது விஜயை நம்பி இந்த கட்சிக்கு வந்தது தவறு என்று மன உளைச்சலில் அவர் வெளியிட்ட ஒரு பதிவுதான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்