ஒரு கதை திரைப்படமாக மாறும்போது அது வெற்றியடையவதும் தோல்வியடைவதும் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது. சுமாராக ஓடினால் கூட போதும் என்ற எண்ணத்தில் உருவான சில தமிழ் படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. குறிப்பாக லப்பர் பந்து பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களை சொல்லலாம்.
எப்படியும் மாஸ் ஹிட் படங்களாக அபார வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பில் வெளியான சில படங்கள் மொக்கை படங்களாக ரசிகர்களிடம் தோற்றுப் போயிருக்கின்றன. குறிப்பாக விடாமுயற்சி தக்லைஃப் இந்தியன் 2 கங்குவா குபேரா கூலி போன்ற படங்களை சொல்லலாம்.
கடந்த 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மதகஜ ராஜா படம் 50 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் 11 நாட்களை கடந்தும் இன்னும் 465 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து ரூ. 500 கோடி வசூலை கடக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று பரபரப்பபாக முதலில் பேசப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சியான் விக்ரமுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே வெற்றிப் படங்கள் இல்லை. சாமி 2 கோப்ரா தங்கலான் வீரதீர தீரன் 2 போன்ற படங்களில் நடிகர் சியான் விக்ரம் நடித்த நிலையில் இதில் எந்த படமுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. அதிலும் தங்கலான் வீரதீர சூரன் 2 படங்களை விக்ரம் பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் ரசிகர்களிடம் அந்த படங்கள் அதிருப்தியை சந்தித்தது.
இதற்கிடையே இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சியான் விக்ரம் கமிட் ஆனார். ஆனால் அந்த படத்தின் கதை பிடிக்காமல் அடிக்கடி திருத்தம் மாற்றம் என்று சொன்னதால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மடோனா அஸ்வின். விக்ரம் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு ஐசரி கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சியான் விக்ரம் கமிட் ஆனார்.
இப்போது இயக்குனரிடம் கதை கேட்ட அவர், மீண்டும் மீண்டும் கதையில் திருத்தங்களும் மாற்றங்களும் சொல்லி அவரை கடுப்பேற்றி இருக்கிறார். 96 மெய்யழகன் போன்ற ஒரு நாவல் போன்ற கதையை இயக்குனர் பிரேம்குமார் கூறியிருக்கிறார். எனக்கு அதெல்லாம் செட் ஆகாது. நான் கமர்ஷியல் ஹீரோ. அடிதடி ஆக்சன் படம் என்றால்தான் ரசிகர்கள் என்னை ரசிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த மாதிரி கமர்ஷியல் படம் பண்ண எனக்கு விருப்பமில்லை என்று இயக்குனர் பிரேம்குமாரும் விலகிய நிலையில், சியான் விக்ரம் இப்படி நல்ல கதைகளை மிஸ் செய்கிறாரே என அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.





