நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இலங்கையில் இந்த படத்தின் ஷூட்டிங் சில வாரங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீ லீலா அதர்வா ரவி மோகன் மற்றும் குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
கடந்தாண்டில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் அமரன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். அமரன் படம் உலக அளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 40 கோடியில் இருந்து ரூ. 75 கோடியாக உயர்த்தி விட்டார். அதே போல் நடிகை சாய்பல்லவியும் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 8 கோடியாக அதிகரித்து விட்டார். அமரன் படம் அனைத்து மொழிகளிலும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையாக ரூ. 60 கோடிக்கு விலை போனது.
ஆனால் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கன்னட நடிகை ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்த மதராஸி படம் இன்னும் சில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. அந்த காட்சிகள் மட்டும் எடுத்து விட்டால் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளை ஏஆர் முருகதாஸ் துவக்கி விடுவார்.
இப்போது பராசக்தி படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் இடையில், மதராஸி படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் அதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இப்போது செய்து வருகிறார். இதில் வைஷாக்கில் உள்ள துறைமுகத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தை 23 கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் முன்வந்துள்ளது. தனது முந்தைய படம் அமரன், ரூ. 60 கோடிக்கு விலை போன நிலையில், இப்போது மதராஸி படம் அதில் பாதி கூட இல்லாமல் ரூ. 23 கோடிக்கு விலை கேட்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் பயங்கர அப்செட்டில் இருந்து வருகிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





