- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசனுடன் இணைந்து கலக்கலான திரைப்படங்களை கொடுத்த டெல்லி கணேஷ்... குணச்சித்திர கதாபாத்திரத்தின் மொத்த உருவமாய் இருந்தவர்...

கமல்ஹாசனுடன் இணைந்து கலக்கலான திரைப்படங்களை கொடுத்த டெல்லி கணேஷ்… குணச்சித்திர கதாபாத்திரத்தின் மொத்த உருவமாய் இருந்தவர் கடந்து வந்த பாதை…

- Advertisement -

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் தனது 80 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கணேஷ் உடலுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அஞ்சலி அளித்து வருகின்றனர்.

 

- Advertisement -

அதே வேளையில், தமிழ் சினிமாவுக்கு அவர் அளித்த பங்கு குறித்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர். கோலிவுட் திரையுலகில் பெரும்பாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதில் பாராட்டைப் பெற்றவர் டெல்லி கணேஷ். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் டெல்லி கணேஷ் பெற்றிருக்கிறார்.

 

- Advertisement -

டெல்லி கணேஷ் குறிப்பாக கமல்ஹாசனின் பெரும்பாலான வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதில் நாம் முதலாவதாக பார்க்கப் போகும் திரைப்படம் நாயகன். தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு சென்று தாதாவாகும் இளைஞன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருக்கு இந்தி மொழியை தமிழுக்கு மொழி பெயர்க்கும் தமிழனாக வருவார் டெல்லி கணேஷ்.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் கமல்ஹாசன் உடனே பயணிப்பார். இதே போல் அபூர்வ சகோதரர்கள் திரைப்படமும் டெல்லி கணேசிற்கு மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம். அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார் டெல்லி கணேஷ். தந்தை கமல்ஹாசன் கதாபாத்திரத்தை கொலை செய்யும் நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார்.

 

இதன் பிறகு, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தைக் கூறலாம். பாலக்காட்டு தமிழில் சமையல் கலைஞராக நடித்து காமெடியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் டெல்லி கணேஷ். கமல்ஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த காமெடி லூட்டியை இப்போது பார்த்தாலும் நமது உள்ளம் மகிழும்.

 

இதேபோல் அவ்வை சண்முகி படத்தையும் கூறலாம். அதிலும், காதின் ஓரமாக பூவை வைத்துக் கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு காமெடி சேட்டைகளும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி, டெல்லி கணேஷ் கொடுத்த திரைப்படங்களை நாம் நினைவு கூர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். அவரது மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேரிழப்பு.

 

- Advertisement -

சற்று முன்