- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காதலித்த முதல் பெண்… ரஜினியிடம் அவர் வைத்த கோரிக்கை - பாட்ஷா...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காதலித்த முதல் பெண்… ரஜினியிடம் அவர் வைத்த கோரிக்கை – பாட்ஷா பட வில்லன் நடிகர் போட்டுடைத்த சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. அதில் கடந்த 1994ம் ஆண்டில் வெளியான பாட்ஷா படம், ரஜினிகாந்தின் சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக, அவரது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்த படமாகும்.

இந்த படத்தில் மும்பை தாதா மற்றும் ஆட்டோ டிரைவர் மாணிக்கம் என்ற 2 கெட்அப்புகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் செய்திருந்தார். படத்தில் நாயகியாக நக்மா நடித்திருந்தார். மேலும் ரகுவரன் விஜயகுமார் சரண்ராஜ் ஆனந்தராஜ் தேவன் சிவா கிட்டி சத்யப்பிரியா ரோகிணி யுவராணி ஜனகராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

மும்பையில் மாணிக் பாட்ஷாவாக ரஜினிகாந்த், மார்க் ஆண்டனி ரகுவரனை எதிர்ப்பார். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்துக்காக சென்னையில் மாணிக்கம் ஆக மாறி ஆட்டோ ஓட்டுவார். மீண்டும் ஒரு கட்டத்தில் தன் குடும்பத்துக்காக அவர் பாட்ஷாவாக மாறி எதிரிகளை பந்தாடுவதே பாட்ஷா படத்தின் கதை. இதில் நக்மாவின் அப்பா கேரக்டரில் தேவன் நடித்திருந்தார்.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாட்ஷா படம் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் பலத்த வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. மீண்டும் மாணிக் பாட்ஷாவை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பாட்ஷா பட நடிகர் தேவன் ரஜினி குறித்த ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

அந்த நேர்காணலில் நடிகர் தேவன் கூறியதாவது, பாட்ஷா படப்பிடிப்பு நடந்தபோது உங்களுக்கு முதல் காதல் இருக்கிறதா என்று ரஜினியிடம் நான் கேட்டேன். ஆமாம், இருக்கிறது என்று அவர் கூறினார். சொல்லுங்க சார் உங்க காதல் கதையை என்று கேட்டேன். அப்போது ரஜினிகாந்த் கூறியது மிகவும் அழகான ஒரு காதல் கதை. முடிவுக்கு வரும்போது அவர் கண் கலங்கிவிட்டார்.

அன்று அவள் சொன்னாள், உங்களுடைய படத்தின் போஸ்டர் நான் பார்க்கணும். கட் அவுட் நான் பார்க்கணும். நீங்க ஒரு பெரிய நடிகர் ஆகணும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அன்றிலிருந்து நான் அவளைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். பார்க்க முடியவில்லை என்று ரஜினிகாந்த் என்னிடம் கூறினார் என்று அந்த நேர்காணலில் நடிகர் தேவன் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்