- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரண்மனை 5 படப்பிடிப்புக்கான ஆரம்ப பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குனர் சுந்தர் சி, 5...

அரண்மனை 5 படப்பிடிப்புக்கான ஆரம்ப பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குனர் சுந்தர் சி, 5 பாகத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்னொரு டிவிஸ்ட் – போட்றா வெடிய!

- Advertisement -

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் கார்த்திக் ரம்பா மணிவண்ணன் செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காமெடி கலந்து காதல் படமாக அமைந்தது. தொடர்ந்து சுந்தர் சி முறைமாமன், மேட்டுக்குடி, ஜானகிராமன், அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.

ஒரு கட்டத்தில் அவரும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சுந்தர் சி நடித்த தலைநகரம், அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4, உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி படங்களாக அவருக்கு அமைந்தன. குரு சிஷ்யன், முரட்டுக்காளை, சண்டை, ஐந்தாம் படை, தீ, வீராப்பு, இருட்டு போன்ற படங்களில் அவரே நாயகனாகவும் நடித்தார்.

- Advertisement -

இதில் அவர் நடித்து இயக்கிய அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 என 4 படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றன. இந்த படங்களில் சுந்தர் சி நடித்திருந்தார். கலகலப்பு, கலகலப்பு 2 ஆகிய படங்களும் சுந்தர் சி க்கு பெரிய வெற்றி படங்களாக இருந்தன.

இந்தாண்டில் வெளியான அரண்மனை 4 ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர் சி டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து அரண்மனை 5 படத்திற்கான ஏற்பாடுகளை சுந்தர் சி செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்திற்காக குரோம்பேட்டையில் ஒரு பேய் பங்களாவும், அதே போல் ஈவிபி கார்டனில் ஒரு பேய் பங்களாவும் ஷெட் அமைக்கும் பணிகள் வெகுவேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே அரண்மனை 5 குறித்த தகவல்களை எங்களது படத்தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குனர் சுந்தர் சி தான் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று நடிகை குஷ்பு சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அரண்மனை 5படப்பிடிப்புக்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன.

இதில் லேட்டஸ்ட் தகவலாக அரண்மனை 5 படத்தின் கிளைமாக்ஸ்சில் அரண்மனை 6 படத்துக்கான லீடும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அரண்மனை 5ன் தொடர்ச்சியாக 6ம் பாகம் வெளியிட சுந்தர் சி இப்போதே திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் சுந்தர் சியுடன் மற்றொரு ஹீரோவும் இணைந்து நடிக்கிறார் என்ற புதிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்