- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயை தொடர்ந்து அரசியலில் குதிக்க தயாரான நடிகர் தனுஷ்? போயஸ்கார்டன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்...

விஜயை தொடர்ந்து அரசியலில் குதிக்க தயாரான நடிகர் தனுஷ்? போயஸ்கார்டன் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் – விரைவில் அறிவிப்பு வருமா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக முதல்வராக ஜெயித்த பிறகு தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து விட்டது. அதுவும் கவுன்சிலர் எம்எல்ஏ அமைச்சர் என்று இல்லாமல் நேரடியாக முதல்வர் நாற்காலியில் தான் அமர்வது என்ற முடிவில் அரசியலுக்கு வர சில நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர் முதலில் எம்ஜிஆர். ஆனால் அவர் திமுக எம்எல்ஏவாக இருந்து பிறகு அதிமுக கட்சியை துவங்கி எம்எல்ஏவாகி முதலமைச்சரானார். அதன்பிறகு எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட செல்வி ஜெயலலிதா, எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தி முதல்வராக செயல்பட்டார்.

- Advertisement -

அதன்பிறகு கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கி முதலில் எம்எல்ஏவாகவும் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜய் இரண்டே ஆண்டுகளில் தனித்து 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் ஜெயித்து இன்று முதல்வராக உள்ளார்.

இதற்கிடையே சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகர் தனுஷ், அரசியலுக்கு வருவது உறுதி என்பது போல மறைமுகமாக சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவருக்கு கொடியும் உள்ளது. என்ன ஆனாலும் சரி, வெற்றி கிடைக்கும் வரை போராடி பார்த்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் திமுகவின் மறைமுக ஆதரவுடன் உள்ளாட்சி தேர்தலில் தவெக செல்வாக்கை சரிக்க நடிகர் தனுஷ் களம் இறக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இன்று நடிகர் தனுஷின் 43வது பிறந்த நாள். அவரது போயஸ்கார்டன் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் அங்கு திரண்டிருந்த பல ரசிகர்கள் ரசிகைகள் வரும் 2031ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்வர் தனுஷ்தான் என்றும் பேசியிருக்கின்றனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திமுகவுக்கு எதிராக வந்த விஜய் முதல்வரான நிலையில், அடுத்து விஜய்க்கு எதிராக அரசியல் களத்தில் நடிகர் தனுஷ் இறங்க உள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்