சில மாதங்களுக்கு முன்பு இது திருமா காலம் என்று அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை போல இது சினிமா நடிகர்களின் காலம் என்று சொல்ல வேண்டிய சூழலில்தான் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக தன்மை கொண்ட ஒரு கலைஞராக இருக்கிறார்.
மேலும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் என்ற சிறப்பு அடையாளமும் நடிகர் தனுஷூக்கு உள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றக்கொடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.
அந்த வகையில் பல நடிகர்களுக்கு அரசியலுக்கு வரவேண்டும்; ஆட்சியை பிடித்து முதல்வராக அமர வேண்டும் என்ற ஆசை வந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த வரிசையில் நடிகர் தனுஷூம் மிக விரைவில் அரசியலுக்கு வந்து விடுவார் என்று பலரும் பரபரப்பாக பேச துவங்கி விட்டனர். ஏனெனில் இதுவரை தனது ரசிகர் மன்ற கொடியை பிரபலப்படுத்தாமல் இருந்த நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்றக் கொடி இணையத்தில் வைரலானது.
பெரும்பாலான தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்களது கார்களில் அந்த கொடிகளை கட்டியபடி பவனி வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 28ம் தேதி நடிகர் தனுஷ் தனது 43 வதுபிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை வழக்கம்போல எளிமையாக கொண்டாடாமல் இந்த முறை தனது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் மிகப் பிரமாண்ட விழாவாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் மாவட்டம் வாரியாக ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வரவழைக்கப்பட உள்ளனர். சென்னையில் வரும் 28ம் தேதி நடக்கும் நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழாவில் இலவச ஆட்டோக்கள் டூவீலர்கள் தையல் மிஷின்கள் குடைகள் மழை கோட்டுகள் என ஏராளமானநலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கூட்டத்தில் நடிகர் தனுஷ் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் நடிகர் தனுஷ் இந்த முறை அவரது பிறந்த நாளை வழக்கம் போல் எளிமையாக கொண்டாடாமல் இப்படி நடத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரு பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளதால் நிச்சயமாக அவர் அரசியல் களத்தில் குதிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் முதல்வரான சூழலில் இப்போது சினிமாவில் தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள சில ஹீரோக்களுக்கு அடுத்த முதல்வர் நான்தான் என்ற கனவு அதிகரித்துவிட்டது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.





