- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ போயி அடுத்த பட அப்டேட் வந்திருச்சு டும் டும் டும்... முதல் செய்கையையே தரமாக...

லியோ போயி அடுத்த பட அப்டேட் வந்திருச்சு டும் டும் டும்… முதல் செய்கையையே தரமாக செய்யும் தயாரிப்பு நிறுவனம்…

- Advertisement -

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் லியோ வெளியாக, ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளம் அடித்தும் கொண்டாடினர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் முதல் பாதி அட்டகாசமாக வந்திருப்பதாகவும், அதற்காகவே இந்த திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் விஜய் ரசிகர்கள் கூறினர். முதல் பாதி கச்சிதமாக இருந்தது என்றும், இரண்டாம் பாதி சற்று சுமாராகத்தான் உள்ளதாகவும் ஜெனரல் ஆடியன்ஸ்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

எது எப்படியோ லியோ திரைப்படம் வெளியாகி கடந்த நான்கு நாட்களில், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் 148 கோடியை 50 லட்சம் ரூபாயை லியோ வசூலித்தது. இந்நிலையில் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் அந்த படத்தின் வசூல் கிட்டத்தட்ட 400 கோடியை தாண்டி இருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாக லியோ பீவர் சற்று ஓய்ந்திருக்கும் சூழலில், அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தின் மேல் முழு கவனமும் செல்லத் தொடங்கியுள்ளது. அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த வெங்கட் பிரபுதான் இந்த படத்தின் இயக்குனர். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

- Advertisement -

படத்தில் விஜய் தந்தை மகன் கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதில் விஜய் உடன் சினேகா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக இது உருவாகிறது.

விஜய் -வெங்கட் பிரபு படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் ஷூட் செய்யப்பட்ட நிலையில், தற்போது படக்குழு டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் மொத்தம் ஆறு சண்டைக் காட்சிகளை வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த நிலையில் தற்போது, விஜய் 68 திரைப்படத்திற்கான பட பூஜை வீடியோ நாளை வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை பகல் 12.05 மணிக்கு வீடியோ வெளியாகும் நிலையில், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.

- Advertisement -

சற்று முன்