- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் படம் தந்த அட்டகாசமான வெற்றி, நடிகர் தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு - வெற்றிமாறன்,...

ராயன் படம் தந்த அட்டகாசமான வெற்றி, நடிகர் தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு – வெற்றிமாறன், செல்வராகவனுக்கு இவரே தலைவலியா மாறிடுவாரோ…?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது 50வது ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது நடிகர் தனுஷ், அவரே எழுதி இயக்கிய படம் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நடிகராக மட்டுமின்றி, சிறந்த இயக்குனராகவும் இந்த படத்தின் மூலம் தனுஷ் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் ராயன் படம் முழுவதும் வன்முறை, பல காட்சிகளில் கொலை நடக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகளாக இருப்பதால் படம், இன்றைய இளைய தலைமுறைக்கு தவறான பாதையை காட்டுகிறது. நடிப்பில் தனுஷ் சிறந்தவர் என்றாலும், இயக்குனராக நல்ல கருத்துகளை ராயன் படத்தில் சொல்லாமல், ஏமாற்றிவிட்டார் என்றும் ஒரு தரப்பில் விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

ஆனால் அதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் கடந்து, ராயன் படம் ரசிகர்களின் வரவேற்பால் ரூ. 100 கோடி என்ற அபார வசூலை பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் கடந்த 7 மாதங்களாக வெளிவந்த 130 படங்களில், அரண்மனை 4, மகாராஜா, ராயன் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி என்ற வசூலை அடைந்திருக்கின்றன.

மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ள ராயன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்ததாக, குபேரன் என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாகிறது. அதில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது.

- Advertisement -

நடிகர் தனுஷ், ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை இயக்கி அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த அந்த படம், இளம் காதலர்கள் அந்த வயதில் ஒன்று சேர முடியாமல் வயதான பின்பு சந்திக்கும் போது மீண்டும் இணைய முயற்சிக்கும் ஒரு கதையாக தனுஷ் எழுதியிருந்தார். இந்த படமும் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. இதில் இளம் வயது காதலர்களாக தனுஷ், மடோனா நடித்திருந்தனர்.

இந்நிலையில் ப பாண்டி, ராயன் ஆகிய 2 படங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது. இதன் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடித்துள்ளார். ராயன் தந்த அதிரடி வெற்றியால் மகிழ்ந்துபோன நடிகர் தனுஷ், மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார், ஸ்டோரி டிஷ்கனிலும் உள்ளார். இனி வெற்றிமாறன், செல்வராகவனுக்கு அவர்களது அபிமான ஹீரோவான தனுஷே பெரிய தலைவலியாக, போட்டியாக வந்துவிடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்