- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி சூர்யா ரசிகர்களின் ஆதரவை பெற திட்டமிடுகிறாரா நடிகர் தனுஷ்? - ஓம் படம் ரிலீஸ்...

ரஜினி சூர்யா ரசிகர்களின் ஆதரவை பெற திட்டமிடுகிறாரா நடிகர் தனுஷ்? – ஓம் படம் ரிலீஸ் தள்ளிப் போக பின்னணி காரணம் இதுதானா?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த 50வது படம் ராயன். இந்த படத்தை அவரே டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்து இருந்தார். ஏஆர் ரகுமான் இசையமைத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. 2024ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது.

ஆனால் ராயன் படத்துக்கு பின் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை குபேரா கேப்டன் மில்லர் கர போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் சரியாக போகாமல் படுதோல்வி அடைந்தது. குபேரா படம் தெலுங்கில் மட்டுமே அதிக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம், அந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஓம். இந்த படம் அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. பிறகு தீபாவளிக்கு ரிலீஸ் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால் இப்போது அந்த படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் தனுஷ் 2 தினங்களுக்கு முன்பு அவரே அறிவித்து இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸாகிறது. வரும் தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த சீன் படம் வெளியாக உள்ளது. எனவே இந்த 2 படங்களுக்கும் வழிவிடும் விதமாக நான் நடித்துள்ள ஓம் படம் வருகிற அக்டோபர் 16 மற்றும் தீபாவளிக்கு வெளியாகாது என்று நடிகர் தனுஷ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது முன்னாள் மாமனார். மேலும் ரஜினியை தலைவர் என்றுதான் தனுஷ் இன்றும் அழைத்து வருகிறார். அதனால் ரஜினி நடித்த ஜெயிலர் 2 படத்துடன் தனுஷ் நடித்த ஓம் படம் மோதக்கூடாது என்று அவர் கருதுவதில் தவறு இல்லை. ஆனால் சூர்யா படம் தீபாவளி ரிலீஸ் என்பதால் ஓம் படம் ரிலீஸ்சை தள்ளி வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படியும் 2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் தனுஷ் அரசியல் களத்தில் இறங்க உள்ளார். அதற்கு முன்னேற்பாடாக நடிகர்கள் ரஜினிகாந்த் சூர்யா ஆகியோரின் ரசிகர்களின் ஆதரவை பெறவே இப்படி ஒரு முடிவை நடிகர் தனுஷ் எடுத்திருக்கிறார். இப்படி செய்வதன் மூலம் மறைமுகமாக ரஜினி மற்றும் சூர்யா ரசிகர்களின் நல்ல அபிமானத்தை பெற முடியும் என்று தனுஷ் திட்டமிடுகிறார் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்