- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களுக்கும் எனக்கும் ஏதோ பிரச்னையாமே, உண்மையா சிவகார்த்திகேயன்? - போனில் அழைத்து பேசி கலாய்த்த...

உங்களுக்கும் எனக்கும் ஏதோ பிரச்னையாமே, உண்மையா சிவகார்த்திகேயன்? – போனில் அழைத்து பேசி கலாய்த்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் விஜய் டிவியில் காம்பியராக இருந்தார். அது இது எது என்ற காமெடி ரியாலிடி ஷோவை நடத்தி விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்தார். சினிமா விருது நிகழ்ச்சிகளையும் கோபிநாத் போன்றவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

அதன்பிறகு மெரினா என்ற படத்தில் சிவகார்த்திகேயனை நடிகராக இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷூக்கும் சிவகார்த்திகேயனும் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில், சினிமாவில் அவரது வளர்ச்சிக்கு நடிகர் தனுஷ் பல விதங்களில் உதவினார். எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நயன்தாராவுடன் தனுஷ் நடனமாடி சிவகார்த்திகேயனுக்கு உதவினார்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறிய நிலையில் தனுஷ் சிவகார்த்திகேயன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் இருவருக்கும் மறைமுக பனிப்போர் நீடிப்பதாகவும் சிவகார்த்திகேயன் குறித்து வதந்திகள் அதிகமாக பரவ காரணமே தனுஷ்தான் என்றும் தகவல்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தனுஷ், சிவகார்த்திகேயனை போனில் அழைத்து பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சிவகார்த்தியேகன் பேசும் தனுஷ், எப்படி இருக்கீங்க சிவகார்த்திகேயன், நான் நல்லா இருக்கிறேன் என்கிறார். நீங்களே எனக்கு போன் செஞ்சு பேசியதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்குது சார் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

- Advertisement -

அதற்கு சிரித்தபடி நடிகர் தனுஷ், வழக்கமான கேள்வியை கேட்டுட்டாங்களா, உங்களுக்கும் அவருக்கும் பிரச்னையாமே என்கிறார். ஆமா சார், ஆல்ரெடி கேட்டுட்டாங்க. இப்போ மாறி மாறி இதையே கேட்டுட்டு இருக்காங்க. நான் அழுதுடுவேன் என்கிற நிலமையில் இருக்கேன் சார் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

அப்பா எல்லோருக்கும் சொல்றேம்பா, அண்ணன் தம்பியா ஒத்துமையா இருக்கிறோம். எதுனா பேசி கெடுத்து உட்றாதீங்கப்பா என்று தனுஷ் கிண்டலாக கூறுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன், நல்லா இருக்கற குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிறாதீங்க என்று கூற அதற்கு தனுஷ் சிரிக்கிறார். இதுக்காக நாம ரெண்டு பேரும் தினமும் வீடியோ எடுத்தா நெட்ல போட முடியும் என்று தனுஷ் கேட்கிறார். நீங்க போன் செஞ்சதால நான் தப்பிச்சேன், நன்றி சார் என்று சிவகார்த்திகேயன் சொல்வதுடன் ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்