வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படங்கள் என்றாலே அது வித்யாசமான ஒரு கோணத்தில் மாறுபட்ட ஒரு கதைக்களத்தில் உருவான ஒரு சிறந்த படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் பொல்லாதவன் ஆடுகளம் அசுரன் விசாரணை வடசென்னை விடுதலை போன்ற படங்கள் அவரது திறமையை பேசிய படங்களாக இருந்தன.
அவரது கம்யூனிச சித்தாத்தங்கள் குறித்து ஒரு தரப்பினரிடையே கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு படைப்பை ஜெயிக்க வைப்பதில் வெற்றிமாறன் காட்டும் ஆர்வமும் படைப்பாற்றலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விடுகிறது. அதனாலேே அவரது படங்கள் ஜெயிக்கின்றன. ஆனால் விடுதலை 2 படம் மட்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியவில்லை.
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் அரசன். இதில் நடிகர் சிம்பு நாயகனாக இப்போது நடித்து வருகிறார். அரசன் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. அதன்பிறகு கோவில்பட்டியில் அடுத்த 3வது ஷெட்யூல் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசன் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்போதெல்லாம் சமுத்திரக்கனி நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கிய கலைஞராக மாறியிருக்கிறார். தெலுங்கு கன்னடம் மலையாள படங்களில் அதிகமாக நடிக்கிறார்.
அரசன் படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, நானும் அரசன் படத்தில் நடிக்கிறேன். இதில் சிம்பு – தனுஷ் மோதல் இருக்குமா என்றால் எனக்கு தெரியாது. படத்தில் நான் இருக்கிறேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார். அரசன் படத்தின் கதையில் அனைத்து சம்பவங்களும் இருக்கிறது. ஒவ்வொரு முறை வெற்றிமாறன் கதை சொல்லும் போதும் அது முற்றிலும் வித்தியாசமாக வேறுபட்டு இருக்கும்.
அரசன் படத்திற்கு ஒரு பெரிய அளவில் உழைப்பு தேவை. அதை தவிர வேறு எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது என்று இயக்குனர் சமுத்திரக்கனி அப்போது கூறியிருக்கிறார். வடசென்னை படத்தில் குணா கேரக்டரில் நடித்தார் சமுத்திரக்கனி. அவருடன் அமீர் கிஷோர் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இப்போது அவர்கள் அனைவருமே அரசன் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.





