- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களுக்காக தான் நான் இன்னும் நடிக்கிறேன்…. இல்லை என்றால் நடிப்பை நிறுத்தி இருப்பேன் - நடிகர்...

அவர்களுக்காக தான் நான் இன்னும் நடிக்கிறேன்…. இல்லை என்றால் நடிப்பை நிறுத்தி இருப்பேன் – நடிகர் தனுஷ் கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். இதுவரை அவர் 50 படங்களில் நடித்திருக்கிறார். கடந்தாண்டில் அவரது நடிப்பில் இயக்கத்தில் வெளியான 50வது படம்தான் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ராயன் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இப்போது நடிகர் தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளிவருகிறது.

- Advertisement -

கதையின் நாயகன் பிச்சைக்காரனாக இருந்து பிறகு பெரிய குபேரனாக மாறுவதுதான் படத்தின் கதைக்களம். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். 3 மணி நேரம் 15 நிமிடமாக இருந்த குபேரா படத்தின் நீளம் தற்போது 14 நிமிடங்கள் குறைக்கப்பட்டு 3 மணி நேரம் ஒரு நிமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் பல பாடல்களை பாடி வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் பல படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். மேலும் அவர் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் தனுஷ் இயக்கிய படம் ப பாண்டி. இந்த படம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியானது. ராஜ்கிரண் ரேவதி பிரசன்னா மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சிறுவயது ராஜ்கிரண் கேரக்டரில் தனுஷூம் நடித்திருந்தார். ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கிய தனுஷ், 4வது படமாக இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

சமீபத்தில் குபேரா படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது, எனக்கு நடிகராக இருப்பதைவிட இயக்குனராக இருப்பது தான் ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்கள் என் படங்களுக்காக காத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் நடிகராக இருக்கிறேன். இல்லை என்றால் நான் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர இயக்குனராக மாறியிருப்பேன் என்று நடிகர் தனுஷ் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்