- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் முரளி மகன் அதர்வா நடித்த நிறங்கள் மூன்று படம் நாளை ரிலீஸ் - ...

நடிகர் முரளி மகன் அதர்வா நடித்த நிறங்கள் மூன்று படம் நாளை ரிலீஸ் – திருமணம் எப்போது என்ற கேள்விக்கு அவர் தந்த அதிரடி பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இதயம், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், சுந்தரா டிராவல்ஸ், கீதாஞ்சலி, பூவிலங்கு, இரணியன் போன்ற பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிறந்த நடிகராக முரளி இருந்தார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் முரளி திடீரென காலமாகி விட்டார். அவரது மகன் அதர்வா பாணா காத்தாடி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் முரளி நடித்திருந்தார். அதுவே அவரது கடைசி படமாகி விட்டது.

- Advertisement -

தந்தை முரளியை போலவே அவரது மகன் அதர்வாவும் நடிப்பில் சிறந்த திறமையாளராக உள்ளார். அவர் நடித்த சண்டி வீரன், பரதேசி, 100, ஈட்டி, கணிதன் உள்ளிட்ட பல படங்களில் அதர்வா நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் அதர்வா நடிப்பு வேற லெவலில் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் நடிகர் அதர்வா நடிப்பில் நாளை நிறங்கள் மூன்று என்ற படம் வெளியாகிறது. துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கிய இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ரகுமான், சரத்குமார் உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் நடித்துள்ளனர். நிச்சயம் நடிகர் அதர்வாவுக்கு இந்த படம் கம்பேக் படமாக அமைய அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

நிறங்கள் மூன்று பட விழாவில் பங்கேற்ற நடிகர் அதர்வா பேசுகையில், கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 படம் பார்த்தில் இருந்தே அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த படத்தின் கதையை கேட்ட போது முதலில் பயமாக இருந்தது. என் கேரக்டருக்கு எதிர்மாறான கதாபாத்திரத்தை இதில் அவர் எனக்கு கொடுத்துள்ளார்.

உண்மையிலேயே இந்த படம் மிகவும் வித்யாசமான படமாக இருக்கும். நிறைய புதிய விஷங்கள் இந்த படத்தில் உள்ளது. சீனியர் நடிகர்கள் சரத்குமார் ரகுமான் போன்றவர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்கின்றனர். எனது திருமணம் விரைவில் நடக்கும் என்று அதர்வா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்