தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். பல படங்களில் பாடியிருக்கிறார். அந்த பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. பல படங்களை தனுஷ் தயாரித்திருக்கிறார். அத்துடன் நடிகர் தனுஷ் இதுவரை 4 படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.
அவரது இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்த ப பாண்டி படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. சில மாதங்களுக்கு முன் ராயன் படம் வெளிவந்து, ரூ. 155 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது. இனி அடுத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லிக்கடை என்ற 2 படங்கள் தனுஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கின்றன.
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். அவர்களது விவாகரத்து வழக்கில் நாளை சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அவர்கள் இருவருமே இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கோர்ட்டில் திட்டவட்டடமாக கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.
நடிகர் தனுஷ் நடித்த பல படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒய் திஸ் கொல வெறி பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலான அனிருத், ஜெயிலர் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், அனிருத் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் தனுஷ் பேசிய நிலையிலும், தற்போது அந்த பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில் பேசிய நடிகர் தனுஷ், சினிமா நடிகர்களில் நான்தான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் பத்திரிகைகளில் கூட சிலர் என்னை ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று எழுதுவார்கள். ஆனால் அனிருத் வந்த பிறகு என்னை யாரும் அப்படி சொல்வதுமில்லை, பத்திரிகைகளில் எழுதுவதும் இல்லை. ஏனென்றால் என்னைவிட அனிருத் ஒல்லியாக இருக்கிறார். இதனால் என்னை பற்றிய அந்த விமர்சனம் அவருக்கு போய்விட்டது. ஆனால் ஒல்லியாக இருந்தாலும் திறமையில் இருவருமே கில்லிதான், என்று பேசியிருக்கிறார்.





