தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு பட நிறுவனத்தின் தயாரிப்பு படமான குபேரா படத்தில் சேகர் கம்முலா என்ற டைரக்டர் இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். அது இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் தனுஷ், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் தனுஷ் சமீப காலமாக நடித்த அவரது படங்கள் பெரிய அளவில் எதுவுமே வெற்றி பெறவில்லை. குறிப்பாக கேப்டன் மில்லர் படம் கூட வசூலில் ஓரளவுக்கு திருப்தியை தந்தாலுமே இந்த படம் வெற்றி படமாக மக்கள் மத்தியில் பெயர் வரவில்லை. அதற்கு காரணம் இந்த படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வன்முறை படமாக அமைந்தது. படம் முழுக்க துப்பாக்கிச் சத்தங்களும், ரத்தமும் வன்முறையுமாக கேப்டன் மில்லர் கடும் விமர்சனத்தை பெற்றது.
இதற்கிடையே நடிகர் தனுஷ், ராயன் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் தனுஷ் நடிப்பதாகவும், கூறப்படுகிறது. இந்த படத்தில் மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் தந்து அவர் இயக்கும் படத்தில் அவர் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது. இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சரவணன், பிரகாஷ் ராஜ் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் தியாகராஜனிடம், தனுஷ் கொடுத்த வாக்குபடி அவரது சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் நான்கு படங்களில் நடிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். அதில் தொடரி படம் நடித்த பிரபு சாலமன் இயக்கியிருந்தார். அடுத்து மாறன் என்ற படத்தில் நடித்திருந்தார். மூன்றாவது கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து, 4வது படத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் படத்தில் நடிக்க வேண்டியது நடிகர் தனுஷ், இப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்காமல் தெலுங்கு நிறுவனங்கள் தயாரிப்பு படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஆனால் தொடரி படமும் ஓடவில்லை. அடுத்து, மாறன் படமும் சரியாக போகவில்லை. கேப்டன் மில்லர் படமும் மிகப்பெரிய தோல்வி என்ற நிலையில், மீண்டும் தனுஷையே கதாநாயகனாக நடிக்க வைத்து படம் எடுக்க, சத்யஜோதி பிலிம்ஸ் ஆர்வமாக முன் வருவது எப்படி என்று ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் உள்ளனர்.





