- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போற படம் இதுதான், படத்தோட பேரு,...

மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் அடுத்து இயக்கப் போற படம் இதுதான், படத்தோட பேரு, நாயகி யாருன்னு கேட்டா…? – அட இப்படி ஒரு சென்டிமென்ட் அவசியம்தானா?

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் குரங்கு பொம்மை. இந்த படத்தை இயக்கியவர் நித்திலன் சுவாமிநாதன். விதார்த், பாரதிராஜா, பாலாசிங், தேனப்பன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது. குரங்கு பொம்மை போட்ட ஒரு பேக்கை வைத்தே படத்தின் கதை பின்னப்பட்டு இருக்கும்.

அதே போல் மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன், லட்சுமி என்ற குப்பை தொட்டியை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக கொண்டு வந்திருப்பார். படத்தின் பாதி வரை குப்பை தொட்டி தான் விஜய் சேதுபதிக்கு தேவையா என்று நினைக்கும் அளவுக்கு படத்தின் கதை விறுவிறுப்பாக, இருக்கும்.

- Advertisement -

மகாராஜா படத்தின் வெற்றியை அடுத்து, டைரக்டர் நித்திலன் சுவாமிநாதனுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் அதை எதையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் மகாராஜா படத்தை இயக்கி தனது திரைபயணத்தில் மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பேஷன் ஸ்டுடியோவுக்குதான் அடுத்த படம் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அந்த வகையில் மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கப் போகும் கதாநாயகியை மையமாக கொண்ட கதை. இது மகாராஜா படம் இயக்குவதற்கு முன்பே டைரக்டர் நித்திலன் திட்டமிட்ட கதைதான். அதனால் அந்த படத்தை தான் இயக்குவது என்ற முடிவில் இருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்த படத்தை மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோ தான் தயாரிக்க உள்ளது. இதில் கவனிக்கப்படும் விஷயம் என்னவென்றால் இந்த படத்துக்கு மகாராணி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மகாராஜா படம் மாபெரும் வெற்றியடைய காரணம், அந்த கதையும், ஸ்கிரிப்டும் அதில் நடித்த நடிகர், நடிகைகள்தான். இதில் எது சொதப்பி இருந்தாலும் படம் இந்த அளவுக்கு மாபெரும் உச்சத்தை தொட்டிருக்காது. அப்படிப்பட்ட பட்சத்தில், மகாராஜா படம் பெற்ற அபார வெற்றிக்காக நித்திலன் தனது அடுத்த படத்துக்கு மகாராணி என பெயர் வைத்திருப்பதை, சினிமா விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்