தமிழ் சினிமாவில் பசங்க படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில்தான் நடிகர் விமல் அறிமுகமானார். தொடர்ந்து மெரினா படத்தை டைரக்ட் செய்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுகமானார். இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டுப்பிள்ளை எதற்கும் துணிந்தவன் கேடி பில்லா கில்லாடி ரங்கா கதகளி இது நம்ம ஆளு வம்சம் உள்ளிட்ட படங்களை இயக்குனர் பாண்டிராஜன் டைரக்சன் செய்திருக்கிறார். இதில் சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. குடும்ப கதைகளை சென்டிமென்ட் கலந்து பாண்டிராஜ் தந்து வருகிறார்.
இப்போது நடிகர் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடிப்பில் தலைவன் தலைவி என்ற படத்தை இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன் விமல் மற்றும் அருள்நிதி போன்ற நடிகர்களை ஹீரோவாக அறிமுகம் செய்தது இயக்குனர் பாண்டிராஜ்தான். பாண்டிராஜ் இயக்கிய படங்களில் கடைக்குட்டி சிங்கம் கார்த்திக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதே போல் சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டுப்பிள்ளை படமும் நல்ல பாராட்டை கொடுத்தது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, அருமையான தொழில் சினிமாதான். நல்ல காசு பெயர் புகழ் எல்லாம் கிடைக்கிறது. எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் கண்டுக்குறாங்க. நல்ல ஹோட்டல் போட்டு தங்க வைக்கிறாங்க.
காலையில் தூங்கி எழுந்ததும் காப்பி கொடுத்து காரில் ஷூட்டிங் ஸ்பாட் அனுப்புறாங்க. பிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்து சவுகரியமா அனுப்பி வைக்கிறாங்க. நல்ல சம்பளத்தையும் கொடுத்து அதையும் செலவழிக்க விடாமல் அவங்களே செலவழித்து பார்த்துக் கொள்கிற ஒரே தொழில் சினிமா தான் என்று இயக்குனர் பாண்டிராஜன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





