- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ விவகாரம், தன்னை பற்றி கடுமையாக விமர்சித்த நயன்தாரா -...

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ விவகாரம், தன்னை பற்றி கடுமையாக விமர்சித்த நயன்தாரா – அதிரடி நடவடிக்கை எடுத்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கதையின் நாயகியாக தன்னை மையப்படுத்தி கதைகளில் நடிக்க நயன்தாரா அதிக ஆர்வம் காட்டுகிறார்.

துவக்கத்தில் சிலம்பரசன், பிறகு பிரபுதேவாவுடன் காதல் வசப்பட்ட நயன்தாரா அவர்களுடன் காதல் முறிவு ஏற்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து, 7 ஆண்டுகளுக்கு பின் திருமணமும் செய்துக்கொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் பெற்றெடுத்த உயிர், உலக் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நயன்தாரா; பியாண்ட் த பேரி டேல் என்ற நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

- Advertisement -

நடிகை நயன்தாரா இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை ஆவணப்படுத்தும் விதமாக உருவான இந்த படத்தில், அவரது குழந்தை பருவம், இளமை பருவம், சினிமா வாய்ப்பு, நடிகையாக வெற்றி பெற்ற கதை, காதல், திருமணம், குழந்தைகள் என பல விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆவணப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

அதே நேரத்தில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போதுதான் நயன்தாராவுக்கும், அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பயன்படுத்தி உள்ளனர். ஆனால் அதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் அவர்கள் அனுமதியோ, தடையின்மை சான்றோ பெறவில்லை.

- Advertisement -

இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாவதற்கு முன்பே, நடிகர் தனுஷ் என்ஓசி தராமல் 2 ஆண்டுகளாக எங்கள் திருமண வீடியோ வெளியாவதை தாமதப்படுத்தி விட்டார், மேலும், இந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, அவர் எவ்வளவு கீழ்த்தரமான செயலை செய்திருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி விட்டார் என்றும் நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் தனுஷ், நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் ஆவணப்படத்தில் தன்னுடைய தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் மீதும் மற்றும் அந்த ஆவணப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்