தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் மணிகண்டன். ஜெய்பீம் காலா குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் மணிகண்டனுடன் சான்வி மேக்னா குருசோமசுந்தரம் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு வைசாக் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட குடும்பஸ்தன் படம் தற்போது 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகளவில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்துக்கு ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குடும்பஸ்தன் படத்தின் முதலில் நடிக்க வேண்டியவர் நடிகர் அசோக் செல்வன்தான். ஆனால் அவரது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் நடிக்குமாறு நடிகர் மணிகண்டனை அவர்தான் சிபாரிசு செய்தார் கூறப்பட்டது. ஆனால் நடிகர் அசோக் செல்வன் மட்டுமின்றி மற்றொரு முக்கிய நடிகரும் இந்த இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிராஜ் பல படங்களில் நடித்தும் பெரிய அளவில் வெற்றிப் படம் எதுவும் இதுவரை தரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிபிராஜ் கூறுகையில், சமீபத்தில் குடும்பஸ்தன் படம் பார்த்தேன். அந்த கதை எனக்கும் நடிப்பதற்காக வந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் நான் நடிக்க முடியாமல் மிஸ் ஆகிவிட்டது.
ஆனால் அந்த படம் பார்க்கும்போது கோயமுத்தூர் பாஷை என்பதையெல்லாம் தாண்டி அந்த கேரக்டரை மணிகண்டன் செய்திருக்கற அளவுக்கு வேறு யாரும் செய்திருக்க முடியாது. எனக்கு படம் பார்க்கும்போது அவங்க பேசுற பாஷையெல்லாம் எங்க ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பீலிங்கை தந்தது என்று கூறியிருக்கிறார். ஒரு நல்ல வெற்றிப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இப்படி இழந்துவிட்டாரே என்று சத்யராஜ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





