- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்டு உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, இப்படி ஒரு...

வீட்டு உரிமையாளர் மீது போலீசில் புகார் அளித்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, இப்படி ஒரு வேலையை பார்த்துப்புட்டாங்களே?

- Advertisement -

இயக்குனர் பாலா அலுவலகத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் கஞ்சா கருப்பு. பிறகு பிதாமகன் படத்தில் கஞ்சாகுடுக்கி கேரக்டரில் சில காட்சிகளில் பாலா அவரை நடிக்க வைத்தார். பிறகு அமீர் இயக்கத்தில் ராம் பருத்திவீரன் படங்களில் நடித்து கஞ்சா கருப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து நாடோடிகள் தாமிரபரணி சுப்ரமணியபுரம் சிவகாசி தெனாவெட்டு சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் காமெடி நடிகராக பிரபலமானார். வெகு யதார்த்தமான அவரது உடல் மொழியும் டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக ஒருமுறை பங்கேற்றார்.

- Advertisement -

நடிகர் கஞ்சா கருப்பு கடந்த 2014ம் ஆண்டில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை அவரே தயாரித்தார். அங்காடித்தெரு நடிகர் மகேஷ் நடிப்பில் உருவான இந்த படத்தில் கஞ்சா கருப்பு ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்ததால் கஞ்சா கருப்பு பலத்த நஷ்டத்தை சந்தித்து கடனில் சிக்கினார்.

காமெடி நடிகராக சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு அவர் பாலா – அமீர் என்ற பெயரில் சொந்த வீடு கட்டியிருந்தார். படம் தயாரிப்பில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக கடன்களை அடைக்க அந்த வீட்டையும் கஞ்சா கருப்பு விற்று விட்டார். அதன்பிறகு சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு வசித்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, ஆரம்பத்தில் எனக்கும் வீட்டு உரிமையாளருக்கும் எந்த பிரச்னையும் இல்லை அவர் கேட்பதற்கு முன்பே நான் வாடகையை கொடுத்து விடுவேன். சில தினங்களுக்கு முன் அவர் திடீரென வந்து வீட்டை காலி செய்யுங்கள், எனக்கு வீடு வேண்டும் என்று கூறினார். சற்று கால அவகாசம் கொடுங்கள், நான் வீட்டை காலி செய்கிறேன் என்று கூற அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.

ஆனால் நான் சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்தபோது, பூட்டி இருந்த என் வீட்டை உடைத்து வெள்ளை அடித்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் என் வீட்டுக்குள் இருந்த கலைமாமணி விருது டாலர் காணாமல் போயுள்ளது. கலைமாமணி விருது டாலர் காணாமல் போனது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளேன், என்று கஞ்சா கருப்பு கூறியிருக்கிறார். இந்த புகார் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்