- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் வடிவேலுவை விளாசித் தள்ளிய பிரபல காமெடி நடிகர் - காஞ்சு போன...

காமெடி நடிகர் வடிவேலுவை விளாசித் தள்ளிய பிரபல காமெடி நடிகர் – காஞ்சு போன 2 கரும்புதான் கிடைச்சது என்றும் கிண்டல்!

- Advertisement -

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். குறிப்பாக 1990ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அவரது காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடி படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு திமுக ஆதரவாளராக மாறிய நடிகர் வடிவேலு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து கண்டபடி விமர்சனம் செய்து பொதுக்கூட்ட மேடைகளில் பேசினார். இதனால் அவரது சினிமா கேரியர் பாதிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் ஷங்கருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 10 ஆண்டுகளாக அவர் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுக்கு காமெடி கேரக்டர் கைகொடுக்காத நிலையில் மாமன்னன் மாரீசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த கேங்ஸ்டர் படத்தில் கூட நடிகர் வடிவேலுவுக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் திமுக ஆதரவாளராக இருக்கும் நடிகர் வடிவேலு சமீபத்தில் கூட திமுக நடத்திய சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு திமுக தான் வருகிற சட்டசபை தேர்தலில் ஜெயிக்கும் என்று பேசியிருந்தார். நடிகர் வடிவேலு அதிமுக குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கஞ்சா கருப்பு பேசியதாவது, அதிமுக கட்சி உடைந்து போய் விட்டதாக நடிகர் வடிவேலு சொல்கிறார். வீணாப் போன வடிவேலு, எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டை. நாளையே நாங்கள் ஒன்று சேர்ந்து விடுவோம். நீ யார் எங்களை பற்றி பேச? நாங்கள் அழகான கட்சி.

நீ எப்படிப்பட்டவன் என்று எங்களுக்கு தெரியும். ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறார்கள். இந்த பொங்கலுக்கு ஸ்டாலின் எங்களுக்கு காஞ்சு போன 2 கரும்புகளை தான் கொடுத்தார். 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு 3 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தார். இதெல்லாம் என்ன நியாயம் என்று அந்த கூட்டத்தில் நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்