- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படங்களின் தொடர் தோல்விக்கு யார் காரணம்? - டிஎன்ஏ படம் வெற்றிக்கு பின்...

என் படங்களின் தொடர் தோல்விக்கு யார் காரணம்? – டிஎன்ஏ படம் வெற்றிக்கு பின் மனம் திறந்து பேசிய நடிகர் அதர்வா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. அவரது மூத்த மகன் அதர்வா. கடந்த 2010ம் ஆண்டில் வெளியான பாணா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். பிரசன்னா மௌனிகா கருணாஸ் டிபி கஜேந்திரன் மனோபாலா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் இதயம் முரளி கேரக்டரில் நடிகர் முரளியே நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அதர்வா பல படங்களில் நடித்தார். குறிப்பாக பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் அதர்வா நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஒட்டுப்பொருக்கி என்ற கதாபாத்திரத்தில் அதர்வா வாழ்ந்து காட்டியிருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து சண்டிவீரன் 100 ஈட்டி இமைக்கா நொடிகள் கணிதன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் நிறங்கள் மூன்று என பல படங்களில் நடித்தும் அதர்வாவுக்கு பெரிய வரவேற்பும் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை. இப்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள டிஎன்ஏ படம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதர்வாவுக்கு டிஎன்ஏ படம் ஒரு கம்பேக் ஆக உள்ளது. இதுதவிர சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்திலும் அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் தனது தந்தை பெயரில் இதயம் முரளி என்ற டைட்டிலிலும் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார். இந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அதர்வா கூறியதாவது, எனக்கு இன்னும் சரியான கதைகளை தேர்வு செய்ய தெரியவில்லை. நான் பிடிக்கவில்லை என திருப்பிய அனுப்பிய பல கதைகளில், மற்ற ஹீரோக்கள் நடித்து அந்த படங்கள் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன.

ஆனால் நான் ஹிட் ஆகும் என நினைத்து நடித்த படங்கள் எல்லாம் தோல்வி படங்களாக இருக்கின்றன. அதனால் நான் மார்க்கெட்டில் இன்னும் பின்தங்கியே இருக்கிறேன். என் படங்களின் தொடர் தோல்விக்கு நான்தான் காரணம். அதனால்தான் முக்கிய இடத்தை என்னால் இதுவரை பிடிக்க முடியவில்லை என்று நடிகர் அதர்வா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்