- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுக்கார் வாங்கிய வடிவேலுவை விமர்சித்த கவுண்டமணி - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசிய...

புதுக்கார் வாங்கிய வடிவேலுவை விமர்சித்த கவுண்டமணி – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விசு போலவே குடும்ப கதைகளை படமாக்கி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் வி சேகர். இவரது படங்கள் குடும்பங்கள் சார்ந்த கதைக்களத்தில் அமைந்திருக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவு பொருளாதார சிக்கல்கள் வேலையில்லாத திண்டாட்டம் கடன் பிரச்னை பெற்றோர் உறவு போன்ற விஷயங்கள் மையக் கருவாக இருக்கும்.

வி சேகர் இயக்கத்தில் வெளியான ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் பொங்கலோ பொங்கல் நான் பெத்த மகனே வரவு எட்டனா செலவு பத்தனா விரலுக்கேத்த வீக்கம் காலம் மாறிப் போச்சு போன்ற பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற குடும்ப கதைகளாகும்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வி சேகர் கூறியதாவது, என்னுடைய டைரக்‌ஷனில் வரவு எட்டணா செலவு பத்தனா என்ற படத்தில் வடிவேலு நடித்தார். அவருக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தேன். நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்து, இப்படி பெரிய சம்பளமும் கொடுக்கறீங்களே என்று வடிவேலு என் காலை தொட்டு கும்பிட்டார்.

அதுமட்டுமின்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்க்கும் போதெல்லாம் என் காலை தொட்டு தொட்டு வடிவேலு கும்பிடுவார். அதைப் பார்த்த நடிகர் கவுண்டமணி, நாங்க சினிமாவுக்காக நடிக்கிறோம். இவன் நிஜத்துலேயே நடிக்கிறான். இவனை நம்பிடாதீங்க என்று சொன்னார்.

- Advertisement -

அப்போது நடிகர் வடிவேலு புதிதாக கார் ஒன்று வாங்கியிருந்தார். அதில் என்னை ஒரு ரவுண்டு வாங்க என்று வற்புறுத்தி காரில் அழைத்துச் சென்றார். திரும்பி வரும் போது அங்கு நின்றிருந்த கவுண்டமணி, செந்தில் கார்கள் மீது மோதி இடிப்பது போல் கொண்டு போய் அந்த டிரைவர் காரை நிறுத்தினார்.

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த நடிகர் கவுண்டமணி பிறகு என்னிடம் பேசும் போது, நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு படாத பாடுபட்டு நடிகனாக வந்தோம். இவன் இப்ப வந்துட்டு புதுசா கார் வாங்கிட்டு எங்க கார் மேல இடிக்க வர்றான். நாங்க புதுசா கார் வாங்குனப்போ எம்ஜிஆர் சிவாஜி கார் மேல இடிக்க நினைச்சோமா, என்று கிண்டலாக பேசினார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்