- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்; அவருக்கு வில்லனாக நடிக்கப் போகும்...

ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்; அவருக்கு வில்லனாக நடிக்கப் போகும் மலையாள சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா? – தரமான சம்பவமா இருக்குதே!

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படம் ஜெயிலர். இந்தப் படம் கடந்தாண்டில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இன்னொரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினியின் ஸ்டைலும் சண்டைக் காட்சிகளும் நடிப்பும் வேற லெவலில் இருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அதே நேரத்தில் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த மலையாள நடிகர் விநாயகன் நடிப்பும் தரமான சம்பவமாக இருந்தது. அந்த கேரக்டரில் அவரை தவிர யார் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு அழுத்தமான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனெனில் விநாயகன் நடிப்பு மிரட்டலாக இருந்தது.

- Advertisement -

பல காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும், முக பாவங்களும் அவர் காட்டிய கோபமும், ஆக்ரோஷமும் ரசிகர்களை மிரட்டியது என்றால் அது மிகையல்ல. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரஜினி எந்த அளவுக்கு காரணமாக இருந்தாரோ அந்த அளவுக்கு விநாயகன் வில்லன் நடிப்பும் காரணமாக இருந்தது என்பது ரசிகர்களால் மறுக்க முடியாதது.

இந்நிலையில் புதிதாக உருவாகும் மலையாள படம் ஒன்றில், வில்லன் நடிகர் விநாயகன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தனது 7வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மான் நடித்த குரூப் படத்தில் இணை எழுத்தாளராக பணிசெய்த ஜித்தின் கே ஜோஸ் இயக்குனராக இந்த படத்தில் அறிமுகமாகிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கி நடந்து வருகிறது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்கள் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விலகிக் கொண்டனர்.

அதன்பின் அந்த முக்கிய கேரக்டரில் விநாயகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்முட்டி நடிக்கிறார். புழு, பிரம்மயுகம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்முட்டி மீண்டும் வில்லனாக இந்த படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 1990களில் தளபதி படத்தில் ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்தனர். இப்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விநாயகன் ஹீரோவாக நடிக்க அவருக்கு வில்லனாக மம்முட்டி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்