- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்தில் என் பையன் நடிப்பு எப்படி இருந்தது? நடிகர் சத்யராஜூக்கு தனது பாணியில் பதில் சொன்ன...

படத்தில் என் பையன் நடிப்பு எப்படி இருந்தது? நடிகர் சத்யராஜூக்கு தனது பாணியில் பதில் சொன்ன நடிகர் கவுண்டமணி – போயும் போயும் இப்படி கலாய்ச்சிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நக்கல் நாயகன் என்று ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் நடிகர் கவுண்டமணி. ஆரம்பத்தில் நாடகங்களில் அவர் நடித்த போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை கிண்டலடித்து கவுண்டர் கொடுப்பது அவரது வழக்கம். அவரது இயற்பெயர் சுப்பிரமணி என்பதால் கவுண்டர் மணி என்று அப்போது அழைத்துள்ளனர்.

அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கூத்துவாத்தியார் கேரக்டரில் அவரை நடிக்க வைத்தவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த கே பாக்யராஜ். வேண்டாம் என்று பாரதிராஜா மறுத்தும் கே பாக்யராஜ் தொடர்ந்து வற்புறுத்தியதால் அந்த படத்தில் அவர் நடிக்க வைத்தார்.

அப்போது கவுண்டர் மணி என்பதை கவுண்டமணி என உதவி இயக்குனர் பாக்யராஜ் தவறாக எழுதி தந்து அதையே டைட்டில் கார்டில் போட்டுவிட்டதால் கவுண்டர் மணி கவுண்டமணி ஆகி விட்டார். ஆனால் நாடகங்களை போலவே சினிமாவிலும் தொடர்ந்து கவுண்ட் அடித்து அடித்து நக்கல் நாயகனாக பெரிய காமெடி கிங்காக மாறியவர் கவுண்டமணி என்றால் அது மிகையல்ல.

அதுவும் நடிகர் சத்யராஜூடன் சேர்ந்துவிட்டால் கவுண்டமணியின் கிண்டல் கேலி கலாட்டா பலமடங்காக மாறிவிடும். அதனால் அவர்கள் நடிக்கும் படங்களில் இதுபோன்ற சுவாரஸ்யமான காமெடிகளுக்கு பஞ்சமே இருக்காது. பல காமெடி காட்சிகளை அவர்களே கிண்டல் கேலியாக நக்கலடித்து பேசி காட்சியை அசத்தலாக மாற்றி விடுவார்கள்.

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். எனினும் பெரிய அளவில் அவர் நட்சத்திர நடிகராக இன்னும் புகழ் பெறவில்லை. இதற்கிடையே நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் முழுக்க ஒரு நாயும் அவருடன் நடித்திருந்தது. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

அந்த சமயத்தில் நடிகர் சத்யராஜ், நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது மகன் சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் எப்படி இருந்தது? என்று கேட்டிருக்கிறார். அதற்கு கவுண்டமணி மிகவும் கூலாக, நாய் நல்லா நடிச்சிருக்குதுப்பா என்று பதில் தந்திருக்கிறார். இந்த தகவலை நடிகர் சத்யராஜே ஒரு நேர்காணலின் போது கூறியிருக்கிறார்.

சற்று முன்