- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் காமெடி கிங் வீட்டில் ஏற்பட்ட சோகம், நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மறைவு...

தமிழ் சினிமாவின் காமெடி கிங் வீட்டில் ஏற்பட்ட சோகம், நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மறைவு – திரையுலகினர் அஞ்சலி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் கடந்த 1980 90களில் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் கவுண்டமணி. இயக்குனர் பாரதிராஜாவின் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் சிறந்த நடிகராக பயணித்து வருகிறார். மூத்த சீனியர் காமெடி நடிகராக கவுண்டமணி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் ராமராஜன் அர்ஜூன் போன்ற பல நடிகர்களுடன் நடித்தவர் கவுண்டமணி.

பிறகு அடுத்த நிலை நடிகர்களான விஜய் அஜீத்குமார் சூர்யா போன்றவர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். பிறகு தனுஷ் சிம்பு போன்றவர்களின் படங்களிலும் காமெடி நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். குறிப்பாக நடிகர் கவுண்டமணி செந்தில் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

அதிலும் நடிகர் ராமராஜன் நடித்த படங்களில் கவுண்டமணி செந்தில் காமெடி பெரிய அளவில் அந்த படங்களை ரசிகர்கள் கொண்டாட வைத்தன. இப்போதும் கவுண்டமணி செந்தில் காமெடி படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர். 3 தலைமுறைகள் கண்ட ஒரு காமெடி நடிகராக தொடர்ந்து 85 வயதான நிலையில் இப்போதும் அவ்வப்போது சில படங்களில் கவுண்டமணி நடித்து வருகிறார்.

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி வயது 67. அந்தக் காலத்திலேயே தன்னை விட 18 வயது மூத்தவரான நடிகர் கவுண்டமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று சென்னையில் காலமானார்.

நடிகர் கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா துறை சார்ந்த நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ரசிகர்கள் கவுண்டமணியின் திரையுலக நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கவுண்டமணியின் வீட்டில் நிகழ்ந்த சோகம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்